ரஜினிகாந்த் வீடியோ ஒரு ஃபேக் மெசேஜ்.. முன்பே சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: தப்பான தகவலை பரப்பியதாக, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட வீடியோவை ட்விட்டர் இணையதளம் அதிரடியாக நீக்கியுள்ளது. இது தவறான தகவல் என முன்பே எச்சரித்திருந்தார் தமிழ்நாடு வெதர்மேன்.
நாளை மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மதியம் ஒரு வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார்.

அதில் மோடியின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தால் கூட பரவாயில்லை.. 14 மணி நேரம் வைரஸ் பரவுவதைத் தடுத்து விட்டால் அதற்கு பிறகு அது பரவாது என்ற ஒரு கருத்தை தெரிவித்தார்.
பொய்யான தகவலை சொல்லி பேசிய ரஜினிகாந்த்.. வீடியோவை நீக்கி டுவிட்டர் அதிரடி
இந்த நிலையில் தவறான தகவல் பரப்புவதை தடுப்பதற்காக ரஜினிகாந்த் வீடியோவை டுவிட்டர் இணையதளம் தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. அதில், இந்த வீடியோ ட்விட்டர் தளத்தில் விதிமுறைகளை மீறியதால் நீக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"ரஜினிகாந்த், நல்ல நோக்கத்தோடு வீடியோ வெளியிட்டிருக்கலாம், ஆனால், இதை ஃபேக் மெசேஜ் என்றுதான் கருத்தில் கொள்ள வேண்டும். ரஜினி தனது பேச்சில், 12 மணி நேரத்தில் வைரஸ் செத்துவிடும் என பேசியுள்ளார். ஆனால், அப்படியான எந்த ஒரு ஆய்வு கட்டுரையும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை." இவ்வாறு வெதர்மேன் பிரதீப் இரவு 8 மணியளவில் தெரிவித்தார். இதன்பிறகுதான், ரஜினி வீடியோவை டுவிட்டர் நீக்கி அதிரடி காட்டியது.
பிரதீப் போலவே வேறு சில நெட்டிசன்களும், ரஜினிகாந்த்தின் தப்பை சுட்டிக் காட்டியிருந்தனர்.