சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Chennai rain | சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

    சென்னை: சென்னையில் நேற்று கனமழை பெய்த நிலையில் இன்றைய தினம் காலை முதல் ஊட்டி கிளைமேட்டை போல் காணப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

    சென்னையில் கடந்த சில மாதங்களாக வறட்சி நிலவி வந்தது. கோடை வெப்பம் வேறு வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதாவது 194 நாட்களுக்கு பிறகு சென்னையில் மழை பெய்து பூமியை நனைத்தது.

    இதையடுத்து கடந்த சில தினங்களாக வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவமழை காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த வண்ணம் இருந்தது.

    48 மணிநேர மராத்தான் உறவு.. செப்டிக் ஆகி உயிரிழந்த மனைவி.. சிறை செல்லாமல் தப்பிய கணவர்!48 மணிநேர மராத்தான் உறவு.. செப்டிக் ஆகி உயிரிழந்த மனைவி.. சிறை செல்லாமல் தப்பிய கணவர்!

    நல்ல மழை

    நல்ல மழை

    சென்னையில் நேற்றைய தினம் கனமழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனிடையே மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

    சென்னையில்

    சென்னையில்

    சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் மிதமானது முதல் நல்ல மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே பெய்து வந்த மழை, தற்போது சென்னையில் காலை 9 மணி முதல் பெய்கிறது.

    எங்கெங்கு மழை

    எங்கெங்கு மழை

    மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை, தியாகராய நகர், வளசரவாக்கம், போரூர், ராமபுரம் வடபழனி, சாலி கிராமம், விருகம்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், முகப்பேர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது.

    லேசான சாரல் மழை

    லேசான சாரல் மழை

    இந்த நிலையில் இன்று காலை முதலே குளு குளு கிளைமேட் நிலவி வருகிறது. ஊட்டியை போல் ஒரு ஃபீலை கொடுக்கும் இந்த கிளைமேட்டால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. எப்போதும் மாலை, நேரங்களில் மட்டுமே மழை பெய்து வரும் நிலையில் தற்போது இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

    மழை

    மழை

    இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் சென்னையில் வெப்பநிலை 27 டிகிரியாக உள்ளது. சென்னையில் சில பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையில் மிகவும் அரிதாக காலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மழை

    மழை

    தென்மேற்கு பருவமழையின் போது கடந்த 15 ஆண்டுகளில் ஜூலை 22, செப்டம்பர் 2,2017, ஜூன் 10- 2014, செப்டம்பர் 09, 2013, ஆகஸ்ட் 14, 2013, ஆகஸ்ட் 20, 2010, ஜூலை 29, 2007 ஆகிய தேதிகளில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. அது போல் கடந்த 15 ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழையின் போது ஜூலை 22, 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13, 2014-ஆம் ஆண்டு ஜூன் 10, 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 1, 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 11, 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆகிய தேதிகளில் காலை நேரத்தில் மழை பெய்துள்ளது.

    கபினி அணை

    கபினி அணை

    கேரளம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொடரும். புதன்கிழமை முதல் இந்த மழை குறையத் தொடங்கும். கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பு நிலையில் உள்ளது. கபினி அணையும் நிச்சயம் நல்ல மழை பொழிவை பெறும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu weatherman says that Chennai temp at 27 C and rains picking up intensity in Chennai with the stratus intensifying into Nimbus (not at all places). Rare day rains in the City and may be the 1st one in my memory in July. On and off light to moderate rains possible throughout the day with breaks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X