சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் வெப்பசலனத்தால் லேசான மழை.. ஆனால் சென்னையில்.. தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வெப்பசலனத்தால் லேசான மழை பெய்யும் என்கிற போதிலும் சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் ஃபனி புயல் வலுவிழந்துள்ளதால் மேற்கத்திய காற்றும் வலுவிழந்துள்ளது.

தமிழகத்தில் உள்பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்யும். இந்த மழைக்கு முக்கிய காரணம் வெப்பம் ஆகும். காலையில் வெப்பமாகவும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு உண்டு.

தமிழ்ப் பசங்கதான் கெத்து... அவன்தான் எனக்கு வேணும் மாப்பு..சீனியர் சுட்டீஸ் கலகல.! தமிழ்ப் பசங்கதான் கெத்து... அவன்தான் எனக்கு வேணும் மாப்பு..சீனியர் சுட்டீஸ் கலகல.!

திருத்தணி

திருத்தணி- சோளிங்கர்- ஆர் கே பேட்டை ஆகிய இடங்களில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. சோளிங்கரில் 144 மி.மீ. மழையும் ஆர் கே பேட்டையில் 74 மி.மீ. மழையும் திருத்தணியில் 12 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

லேசான மழை

லேசான மழை

சேலம், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர் ஆகிய பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் இங்கு மழை பெய்யும். பெங்களூரிலும் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

மழை பெய்யாது

மழை பெய்யாது

அதிக மழையை யாரும் எதிர்பார்க்காதீர்கள். அங்கும் இங்கும் இடி இடித்து மின்னலுடன் மழை பெய்வது அவ்வளவுதான். சென்னையை பொருத்தவரை வெப்பம் தொடரும். மழை பெய்யாது என பிரதீப் ஜான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

லேசான மழை

லேசான மழை

இது போல் சென்னை வானிலை மையமும் இன்று அனல் காற்று வீசும். வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu Weatherman says that Chennai will continue to sizzle in heat and no rains possible.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X