சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐய்யோ.. செப்டம்பரில் சென்னையை சுற்றி செக்க செவேல் தக்காளிகள்.. இன்று இரவு தரமான சம்பவம்.. வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் ஆகியவற்றால் கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையிலும் செப்டம்பர் மாதத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

 எப்படி நடந்தது? கார்த்திக் தியாகி சம்பவத்தால்.. எழுந்து நின்ற மைதானம்- நூற்றாண்டின் ஆகச்சிறந்த ஓவர்? எப்படி நடந்தது? கார்த்திக் தியாகி சம்பவத்தால்.. எழுந்து நின்ற மைதானம்- நூற்றாண்டின் ஆகச்சிறந்த ஓவர்?

இயல்பு வாழ்க்கை

இயல்பு வாழ்க்கை

அவ்வப்போது பெய்யும் திடீர் மழையால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நேற்றைய தினம் வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அது போல் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

கனமழை

கனமழை

சென்னையில் இன்று அதிகாலை பரவலாக கனமழை பெய்தது. சென்னை வானிலை மையம் அறிவித்தபடி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது. சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல், கிண்டி, கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Recommended Video

    பருவமழைக்கு தயாராகும் சென்னை.. நேரில் சென்று பார்வையிட்ட Chief Secretary Iraianbu
    வெதர்மேன் ட்வீட்

    வெதர்மேன் ட்வீட்

    இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் சென்னையில் செப்டம்பர் மாதத்தில் முதல் முறையாக சிவப்பு நிற தக்காளி உள்ளன. இதனால் இன்று இரவு சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் சென்னை புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

    செல்சியஸ்

    செல்சியஸ்

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பகலில் தெளிவாக காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவே இருக்கும் என தெரிவித்துள்ளது.

    English summary
    Tamilnadu Weatherman says that Chennai, Kanchipuram, Tiruvallur and Chengelput will get heavy rains tonight.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X