எதிர்பார்த்த மாதிரியே கடலூரில் வச்சு செய்த மழை.. என்ன இது பச்சாதாபமே பாக்க மாட்டேங்கிதே!.. வெதர்மேன்
சென்னை: கடலூரில் எதிர்பார்த்த மாதிரியே கனமழை பெய்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடைகிறது. சீசன் மழை என்றால் பொதுவாக டிசம்பரில் முடிந்து விடும். ஆனால் ஜனவரி மாதத்திலும் மழை பெய்வது அரிதானதாகும். இதற்கு லாலினோ எபெக்ட்டே காரணமாகும்.
தமிழகத்திற்கு மழை பெய்வதற்கான சாதகமான சூழல் அமைந்துள்ளதும் காரணமாகும். கடந்த வாரம் சென்னையில் ஒரே நாளில் மழை கொட்டி தீர்த்தது. இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்தது.

ஆள் இல்லாத கடை
இதுகுறித்து நேற்றைய தினம் அவர் தனது பதிவில் கூறுகையில் ஜனவரி மாதம் எப்போதும் வானிலை வலைபக்கங்களை வைத்திருப்போர், ஆள் இல்லாத டீ கடையில் டீ ஆத்திட்டு இருப்பாங்க, என்னத்த சொல்ல, ஆனால் இந்த ஜனவரி மாதம் மழை விடுவேனா என்கிறது. அந்த அளவுக்கு அடம்பிடிக்கிறது. கிழக்கு காற்றினால் ஜனவரி முதல் வாரத்தில் மழை பெய்தது.

வளி மண்டல மேலடுக்கு
இலங்கையின் தென் கிழக்கு பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் ஏற்படும் ஈரப்பதம் தமிழக கடலோரம் நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் கடலூரிலிருந்து தூத்துக்குடி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். சென்னையில் எங்காவது ஒரு சில இடங்களில் அடுத்த 2 முதல் 3 நாட்களில் மழை பெய்யும் என்று்ம கூறியிருந்தார்.

அதிகபட்ச மழை
இந்த நிலையில் வெதர்மேன் கணித்தது போலவே கடலூரில் மழை பின்னி பெடலெடுத்துவிட்டது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கடலூரில் எதிர்பார்த்து போலவே நல்ல மழை பெய்துள்ளது. இந்த பருவமழையில் மழை கருணையே காட்டாமல் பெய்து கொண்டிருக்கிறது. புவனகிரியில் அதிகபட்சமாக 105 மிமீ. மழை பெய்துள்ளது.

பதம் பார்த்த மழை
பரங்கிப்பேட்டையில் 93 மி.மீ. மழையும், அண்ணாமலை நகரில் 70 மி.மீ மழையும், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பெய்யும் மழையின் அளவை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நிவர் புயலின் போது புவனகிரியை ஒரு பதம் பார்த்துவிட்டது இந்த மழை.