சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தை விட்டு செல்லும் ஃபனி.. அதிக வெப்பத்தால் ஆபத்து.. தமிழ்நாடு வெதர்மேன்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தை விட்டு செல்லும் ஃபனி.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

    சென்னை: மழை வரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தமிழக கடற்கரையை விட்டு விலகி செல்வது மிகவும் ஆபத்தானது என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது என சென்னை வானிலை மையம் இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது. இது சென்னை - புதுவை இடையே கரையை கடக்கும் என தனியார் வானிலை மையங்கள் தெரிவித்தன.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று ஃபனி புயலாக உருவானது. இந்த புயல் நாளை தீவிர புயலாக மாறி 30-ஆம் தேதி வடதமிழகம்- ஆந்திரா இடையே நெருங்குவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    புயலில் இருந்து நெல் மூட்டைகளை காக்க சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல விவசாயிகள் கோரிக்கை புயலில் இருந்து நெல் மூட்டைகளை காக்க சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல விவசாயிகள் கோரிக்கை

    ஆபத்தானது

    ஆபத்தானது

    இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில் கூறுகையில் மழை வரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தமிழக கடற்கரையை விட்டு விலகி செல்வது பெரும் ஆபத்தானது. உண்மையாக நம்ம மக்கள் பாவம்.

    வெப்பம் தகிக்கும்

    வெப்பம் தகிக்கும்

    இதுக்கு இந்த ஃபனி வராமலேயே இருந்திருக்கலாம். சென்னையில் கடந்த 200 ஆண்டுகளில் இருமுறை அதிக வெப்பம் காரணமாக புயல்கள் வேறு திசையில் சென்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. அதன்படி 2003- ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி பர்மாவுக்கு புயல் சென்றது. இதனால் அதிக வெப்பம் 45 டிகிரி செல்சியல் தகித்ததால் இந்தியாவில் வெப்பக்காற்றால் 1000 பேர் பலியாகிவிட்டனர்.

    நாளை தெரிந்து விடும்

    நாளை தெரிந்து விடும்

    அது போல் 1998-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி மீண்டும் ஒரு முறை புயலானது பர்மாவுக்கு நகர்ந்து சென்றது. இதனால் 44.1 டிகிரி வெப்பத்தால் இந்தியா முழுவதும் அனல் காற்றால் 2500 பேர் பலியாகிவிட்டனர். ஃபனி புயலால் அனல் காற்றா இல்லை தெறிக்க விடும் மழையா என்பது நாளை தெரிந்து விடும்.

    தப்பிவிடுவோம்

    தப்பிவிடுவோம்

    ஃபனி புயல் தமிழகத்துக்கு வராவிட்டாலும் தமிழகத்துக்கு அருகே வந்தால் கொஞ்சம் மழையோ அல்லது மேக மூட்டமோ ஏற்படும். இதனால் நாம் தப்பிவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

    தண்ணீர் பிரச்சினை

    தண்ணீர் பிரச்சினை

    கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவர் கூறுகையில் தமிழகத்தில் கரையை கடந்தால் வறட்சி போய் வெள்ளப் பெருக்கு ஏற்படும். ஒரு வேளை சென்னை அருகே இந்த புயல் கரையை கடந்தால், இது அனைத்து தண்ணீர் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் புயல் பாதை மாறி செல்வது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamilnadu Weatherman says that curving away from our Tamil Nadu coast is more deadly. The Top Two All time hottest days of Chennai in last 200 years have been coincided with cyclones moving away.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X