சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையின் கடைசி நம்பிக்கை.. டிசம்பர் மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: அடுத்த கோடையிலிருந்து சென்னை தப்பிக்க டிசம்பர்தான் கடைசி நம்பிக்கை என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னைக்கு அவ்வ்ப்போது மழையை தந்தது.

சென்னையில் மழை

சென்னையில் மழை

இதையடுத்து கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் அதிக மழையை பெற்றன. அப்பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. இந்த மழையால் நீர் நிலைகள் நிரம்பியதாக கூறப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட காற்றழுத் தாழ்வு நிலையால் சென்னையில் மழை பெய்தது.

மழை

எனினும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகள் நிரம்பவில்லை.இதுகிறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில் பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. இதற்கு காரணம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் பெய்த மழையே காரணமாகும்.

நிரம்பவில்லை

நிரம்பவில்லை

ஒரு பகுதி மட்டுமே பாதிப்புக்குள்ளானது என்றால் அது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள்தான். செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் பூண்டி ஆகிய ஏரிகளில் இன்னும் நீர் நிரம்பவில்லை.

மழையை கேட்க வேண்டியிருக்கும்

மழையை கேட்க வேண்டியிருக்கும்

அதே நேரத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியும் நல்ல நிலையை எட்டியுள்ளது. அதுபோல் ரெட்டேரியும் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் உள்ளது. டிசம்பர் மாதம்தான் நமது கடைசி நம்பிக்கையாகும். ஆனால் அந்த டிசம்பரில் நாம் அதிக மழையை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu Weatherman says that Most of the dams are having good storage thanks to the good South West monsoon in the Catchment areas. Only one region is suffering with less than 15% water in Chembarabakkam, Cholavaram and Poondi. Meanwhile Veeranam has some good storage and Redhills has one quarter of water. December rains are our last hope but too much to ask from December.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X