சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதி தீவிர மேகங்கள்.. மேக வெடிப்பு போல் கொட்டிய மழை.. எல்லாம் நடந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Heavy rain lashes in Chennai, Kanchipuram

    சென்னை: அதி தீவிரமான மேகக் கூட்டங்களால் மேக வெடிப்பு போல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழை கொட்டியது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    தமிழகம் மற்றும் புதுவையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் பேய் மழை பெய்து வருகிறது.

    இதனால் இந்த 3 மாவட்டங்களும் குளிர் பிரதேசங்கள் போல் காட்சியளிக்கிறது. இந்த மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு பதிவை போட்டுள்ளார்.

     காலாண்டு தேர்வு.. சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் அடை மழை பெய்தாலும் பள்ளிகள் விடாது இயங்கும் காலாண்டு தேர்வு.. சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் அடை மழை பெய்தாலும் பள்ளிகள் விடாது இயங்கும்

    மழை பெய்யும்

    மழை பெய்யும்

    அந்த பதிவில் அவர் கூறுகையில் நவம்பர் 2017-ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் நல்ல மழை பெய்துள்ளது. பொதுவாக வடகிழக்கு பருவமழையின்போதுதான் இத்தகைய அளவு மழை பெய்யும்.

    வளிமண்டல மேலடுக்கு

    வளிமண்டல மேலடுக்கு

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு விருந்துதான். நகரமே ஈரப்பதமான தினமாக இருக்கிறது. கடும் கனமழை பெய்கிறது. இதற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக்கு நன்றி கூறிக் கொள்ளலாம்.

    தூரல்கள்

    தூரல்கள்

    சிறிது நேரம் கழித்து தூரல்கள் இருக்கும். அதன் பின்னர் கனமழை பெய்யும். இதைத் தொடர்ந்து இந்த மழை நின்றுவிடும். திருவள்ளூரில் அதிகப்பட்சமாக 216 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் 104 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் இந்த ஆண்டின் ஈரப்பதமான நாளாக இன்று உள்ளது.

    பிரதீப் ஜான்

    பிரதீப் ஜான்

    இந்த மழையால் பூண்டி ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இது வடகிழக்கு பருவமழை போல் உள்ளது. பரவலாக எல்லா இடங்களில் ஒரே நேரத்தில் மழை பெய்துள்ளது. திருவள்ளூரில் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருக்கும். அதி தீவிர மழையுடன் மேக வெடிப்பு போல் எல்லாம் நடந்து முடிந்து விட்டது என்றார் பிரதீப் ஜான்.

    English summary
    Tamilnadu Weatherman says that Poondi Lake should generate inflows with these rains. This was like NEM rains, widespread and rained everywhere at same time. Tiruvallur should see lot of water stagnation. Everything happened with high intensity spells like a cloud burst.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X