சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிச. 2 முதல் டெல்டா பகுதிகளில் மழை பெய்யும்.. விசாயிகளின் வயிற்றில் பால் வார்த்த வெதர்மேனின் செய்தி

Google Oneindia Tamil News

சென்னை: டிசம்பர் 2-ஆம் தேதி முதல் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 301.8 மி.மீ மழை பெய்துள்ளது. அது போல் தமிழகத்தில் 808.2 மி.மீ மழை பெய்துள்ளது. நிவர் புயலால் சென்னைக்கு நல்ல மழை கிடைத்துள்ளது.

ஆனால் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே டெல்டா மாவட்ட மக்களுக்கு மழையே வரவில்லை. இதனால் வரும் கோடையை எப்படி சமாளிப்பது என்ற கவலையில் அவர்கள் உள்ளார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு ஆறுதல் தரும் நல்ல செய்தியை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திடீர் மழை.. ஒரு வேளை அதுதான் காரணமா இருக்குமோ!.. வானிலை அறிக்கையை பார்க்கும் மக்கள்!சென்னையில் திடீர் மழை.. ஒரு வேளை அதுதான் காரணமா இருக்குமோ!.. வானிலை அறிக்கையை பார்க்கும் மக்கள்!

பிரதீப் ஜான்

பிரதீப் ஜான்

இதுகுறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும். அது இலங்கை வழியாக மன்னார் வளைகுடா சென்று அங்கிருந்து கன்னியாகுமரி கடலுக்கு சென்று அரபிக் கடல் செல்வது போல் உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

இன்னும் சில வானிலை ஆய்வாளர்கள் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென் கேரளா வழியாக செல்லும் என கணித்துள்ளனர். இதனால் வரும் 2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை தேனி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும்.

அரபிக் கடல்

அரபிக் கடல்

குன்னூர், கொடைக்கானல், பாபநாசம், மாஞ்சோலை பகுதிகளில் கனமழை பெய்யும். அது போல் டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை, சிவகங்கை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் உருவாகும் இந்த காற்றழுத்தம் மன்னார் வளைகுடா வழியாக அரபிக் கடலுக்கு செல்வதையும் காண முடிகிறது.

மதுரை , திருச்சி

மதுரை , திருச்சி

இதனால் கிழக்கு காற்று நிலத்தை நோக்கி வீசுகிறது. இதனால் மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அது போல் மேற்கு மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர் பகுதிகளிலும் ஓரிரு நாட்கள் மழை பெய்யலாம். இவர்களுக்கு டிசம்பர் 3 முதல் 6-ஆம் தேதி வரை மழை பெய்யும்.

காற்றழுத்தம்

காற்றழுத்தம்

இலங்கை அல்லது மன்னார் வளைகுடாவில் காற்றழுத்தம் இருக்கும் போது டிசம்பர் 2-ஆம் தேதி முதல் வடதமிழகம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் வடக்கு வெப்பச்சலனத்தால் நல்ல மழை பெய்யும். அது அரபிக் கடலில் நகர்ந்து செல்லும் போது மேகங்கள் கூடி ஒரு வித அழுத்தத்தால் மழை பெய்யும்.

கரடுமுரடு

கரடுமுரடு

இதனால் சென்னைக்கு லேசான மழை கிடைக்கும். மற்ற மாவட்டங்களுக்கு ஓரிரு நாட்கள் மழை பெய்யும். இலங்கை வழியாக ஒரு வலுவான புயல் வருவது என்பது மிகவும் அரிதானது. எனவே அது வலுவிழந்த ஆழ்ந்த அழுத்தமாக இருக்கலாம். இலங்கையை சுற்றியுள்ள கரடுமுரடான மலைகளால் வலுவிழக்கும்.

பலமான காற்று இல்லை

பலமான காற்று இல்லை

எனவே காற்று பலமாக வீசாது. டிசம்பர் 3, 4 தேதிகளில் தென் மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசும். மீனவர்கள் மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி, லட்சத்தீவுகள், கேரள கடலோரம் உள்ளிட்ட பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.

English summary
Tamilnadu Weatherman Pradeep John says that its time for South Tamilnadu and Delta districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X