சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளைக்கு பாருங்க.. கேரளாவில் 150 முதல் 200 மி.மீ. மழை கொட்டும்.. உஷாராக இருங்கள்.. வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: கேரளாவில் நாளை மழை கொட்டோ கொட்டென கொட்ட போகிறது. இதனால் மழையின் அளவு மிக மிக அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் கேரளாவில் நேற்றிரவு முதல் பரவலாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் கேரளாவில் பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக அதிகமான கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொட்டித்தீர்த்த மழை... ஆறுகளில் வெள்ளம் - திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் தவிப்பு கொட்டித்தீர்த்த மழை... ஆறுகளில் வெள்ளம் - திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் தவிப்பு

ஆரஞ்ச் அலர்ட் விடுத்த வானிலை மையம்

ஆரஞ்ச் அலர்ட் விடுத்த வானிலை மையம்

அது போல் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால் கேரளாவில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

நீர் நிலைகள் அருகே செல்ல வேண்டாம்

நீர் நிலைகள் அருகே செல்ல வேண்டாம்

நீர் நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். கடந்த சில தினங்களாக கடவுளின் தேசம் என போற்றப்படும் கேரளாவில் இயற்கை சீற்றங்கள் அதிக அளவுக்கு ஏற்படுகின்றன.

புயல்

புயல்

அதிலும் நிறைய புயல்கள் அரபிக் கடலில் உருவாவதாலும் கேரளாவில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நாளை கேரளாவில் பெய்யும் மழையின் அளவு மிக மிக அதிகமாகவே காணப்படும். அது போல் வால்பாறை, நீலகிரி (தேவலா- பண்டலூர் பகுதி), கன்னியாகுமரி, நெல்லை மலை பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மலைத் தொடர்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

வெதர்மேன் எச்சரிக்கை

வெதர்மேன் எச்சரிக்கை

கோவையில் கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. மிக குறைந்த நேரத்தில் கேரளாவில் 150 முதல் 200 மி.மீ. மழை வரை பெய்யக் கூடும். எனவே பாதுகாப்பாக இருங்கள் என்றும் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார். அது போல் நெல்லை மாவட்ட மலைப் பகுதிகளில் மாஞ்சோலையில் மிக கனமழை பெய்து வருகிறது.

English summary
Tamilnadu Weatherman Pradeep John says that Kerala will get heavy rain tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X