சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் புயல் வராது.. ஆனா வட தமிழகத்துக்கு... வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: வடதமிழக பகுதிகளுக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நல்ல மழையை கொடுக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தெற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weatherman says that North TN belt will get more rains

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கஜாவால் பாதித்த டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.

காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் புதுவை ஆகிய பகுதிகள் பாதிக்கப்படுவதோடு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த பகுதிகளில் இன்னும் சில இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும். 20, 21, 22 ஆகிய தேதிகளில் இரு தினங்களுக்கு சென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவாகாது. ஆனால் வட தமிழகத்தில் செம மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu Weatherman says that This low / Depression being a rain-filled system will affect Cuddalore, Kancheepuram, Tiruvallur, Chennai, Villupuram, Vellore, Thiruvannamalai and Pondy will all see heavy rains and some places are going to see very heavy rains.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X