சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் 4 நாளும் மழைதான்.. அதிலும் 29ம் தேதி ஒரு "பருவமழையே" காத்திருக்கு.. வெதர்மேன் கூல் நியூஸ்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தினந்தோறும் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வரும் ஏப்ரல் 26 முதல் 30 ஆம் தேதி வரை மழை பெய்ய சாத்தியக் கூறுகள் இருப்பதாக பதிவிட்டிருந்தேன்.

ஆனால் தற்போது வானியல் நிகழ்வுகள் மிகவும் தெளிவாக உள்ளன. ஏப்ரல் 30-ஆம் தேதி வரை அனைத்து நாட்களிலும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் மற்ற நாட்களில் மழை வாய்ப்பை தவறவிட்டிருந்தாலும் வரும் ஏப்ரல் 28 நள்ளிரவு முதல் அடுத்த நாள் 29ஆம் தேதி காலை வரை நல்ல மழை பெய்யும்.

39 வருஷமா போராட்டிருக்கேன்.. ஒரு சொட்டு சாராயம் கூட இருக்க கூடாது.. டாக்டர் ராமதாஸ் ஆதங்கம்39 வருஷமா போராட்டிருக்கேன்.. ஒரு சொட்டு சாராயம் கூட இருக்க கூடாது.. டாக்டர் ராமதாஸ் ஆதங்கம்

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை

வெப்பச்சலனத்தால் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். இந்த பகுதிகளில் ஏப்ரல் 29 ஆம் தேதி காலை இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளது. எனவே அன்றைய தினம் மழையின் மீது ஒரு கண் வைத்திருப்போம். இது கடலில் இருந்து ஏற்படும் காற்றால் மேகக் கூட்டங்கள் இழுக்கப்பட்டு வடகிழக்கு பருவமழை போல் பெய்ய போகிறது.

கேரளா

கேரளா

தமிழகத்தின் வடபகுதியில் மழை இன்றி காணப்படும் போது நீண்ட நாட்கள் கழித்து கேரளா, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய தமிழக பகுதிகளில் அதி தீவிர இடியூடன் கூடிய மழை பெய்துள்ளது. கொச்சியில் நல்ல மழை பெய்கிறது. கேரளாவின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்யும்.

மழை இருக்காது

மழை இருக்காது

தமிழகத்தின் ஒரு சில இடங்கள் தவிர்த்து மே 1 ஆம் தேதி முதல் மழை இருக்காது. அது வரை ஏப்ரல் 29ஆம் தேதி பெய்யும் மழை மீது ஒரு கண் இருக்கட்டும் என தெரிவித்துள்ளார். இந்த மாதம் முடிவதற்குள் டமால் டுமீல் மழை பெய்யும் என நேற்றைய பதிவில் அவர் தெரிவித்துள்ளதால் கொரோனாவுக்கு மத்தியில் மழை மீதான எதிர்பார்ப்பு எகிறுகிறது.

9 மாவட்டங்கள்

9 மாவட்டங்கள்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது. வெப்பச்சலனத்தால் இந்த மழை பெய்துள்ள நிலையில் தமிழகம், புதுவை, காரைக்காலில் வெப்பச்சலனம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary
Tamilnadu weatherman says that there are high chances of massive thunderbolts like today to be seen across Chennai, KTC and coastal areas of TN on April 29th morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X