சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியிலிருந்து சென்னை உள்பட தமிழகத்துக்கு பரவும் காற்று மாசு.. என்ன காரணம்?- வெதர்மேன் விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியிலிருந்து பரவும் காற்று மாசு.. என்ன காரணம்?- வெதர்மேன் விளக்கம்

    சென்னை: டெல்லியிலிருந்து சென்னை உள்பட தமிழகத்துக்கு காற்று மாசு பரவுகிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.

    டெல்லி மற்றும் வட இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக காற்று மாசு பாடாய்படுத்தி வருகிறது. இதனால் டெல்லியில் 8 இடங்களில் காற்று சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களாக மாசு கலந்து பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சாலை விபத்துககள் ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. 8 இடங்களில் காற்று மாசு 999 புள்ளிகள் உள்ளன.

    36 ஆண்டுகளுக்கு பிறகு.. இந்தியாவில் தாயை தேடி கண்டுபிடித்த அமீரக பெண்.. 36 ஆண்டுகளுக்கு பிறகு.. இந்தியாவில் தாயை தேடி கண்டுபிடித்த அமீரக பெண்.. "போனஸும்" கிடைத்தது!

    தமிழ்நாடு வெதர்மேன்

    தமிழ்நாடு வெதர்மேன்

    இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பரவுகிறது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    வீரர்கள்

    வீரர்கள்

    இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் டெல்லி மற்றும் வடஇந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் முகமுடி அணிந்து கொண்டு விளையாடுகின்றனர்.

    காற்று மாசு

    காற்று மாசு

    நாளை வரை டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தர குறியீடு 500-க்கு மேல் உள்ளது. இதற்கு காரணம் ஹரியானா மற்றும் பஞ்சாபில் உள்ள விவசாயிகள் கரும்பினஅ அடிபாகத்தை எரித்து வருவதால் ஆண்டுதோறும் காற்று மாசு ஏற்படுகிறது.

    காற்று மாசு

    காற்று மாசு

    இது தமிழகத்தை மிகவும் அரிதாக பாதிக்கும். வடகிழக்கு பருவமழை இந்த காற்று மாசு தமிழகத்துக்கு வராதபடி பாதுகாக்கும். சென்னை மற்றும் தமிழகத்தில் சுத்தமான காற்றும் சுளீர் வெயிலும் இருப்பது கிழக்கு பகுதியில் இருந்து வீசும் காற்று மாசுபடாததுதான் காரணம்.

    குழந்தைகள்

    குழந்தைகள்

    ஆனால் இந்த முறை வடகிழக்கு பருவமழை இடைவெளி விட்டுள்ளதால் அடுத்த வாரம் தமிழகத்தில் தீவிரமாக பரவுகிறது. அடுத்த வாரத்தில் தமிழகத்தின் காற்று மாசானது 200 முதல் 300 தர குறியீடு இருக்கும். டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுத்தது போல் சென்னை மற்றும் தமிழகத்திலும் விடுமுறை விடுவார்கள் என குழந்தைகள் எதிர்பார்க்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu weatherman says that The hazy and polluted air which is choking Delhi and North India last one week will be pushed towards entire East coast of India including Chennai and other parts of Tamil Nadu next week.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X