சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்!

Google Oneindia Tamil News

Recommended Video

    TN Weather Update : சென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்- வீடியோ

    சென்னை: சென்னையை நோக்கி மெதுவாக சிவப்பு தக்காளிகள் நகர்ந்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார்.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு மழை பெய்து வந்தது. இதில் வேலூர் மாவட்டத்தையே புரட்டி போட்டது.

    சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கும் அளவுக்கு மழை அடி அடியென அடித்துவிட்டது. கடந்த 3 மாதங்களாக தமிழகமே தண்ணீர் தாகத்தில் இருந்து வந்தது.

    மழை நீரை சேகரித்து வைக்க

    மழை நீரை சேகரித்து வைக்க

    இத்தனை மழை பெய்தும் மழை நீரை சேகரித்து வைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மழையால் பூமி குளிர்ச்சியாவதை நினைத்து மகிழ்ச்சி அடையலாமே ஒழிய தண்ணீர் வீணாவதை தடுக்க முடியவில்லை. இதே போல் தான் தலைநகர் சென்னையில் கடும் வறட்சி நிலவி வந்தது.

    நார்வே வானிலை மையம்

    நார்வே வானிலை மையம்

    தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால் ஓரளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. சென்னையில் வரும் 28-ஆம் தேதி வரை விட்டு விட்டு கனமழை முதல் லேசான மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    பேஸ்புக் பக்கம்

    எனவே சென்னை தண்ணீர் பிரச்சினையை போக்க இந்த மழையை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

    சிவப்பு தக்காளி

    சிவப்பு தக்காளி

    அவர் கூறுகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை சுற்றி மெதுவாக வரும் சிவப்பு தக்காளிகள். இதனால் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. இந்த 3 மாவட்டங்களை நோக்கி சிவப்பு தக்காளி வருவதற்கு கொஞ்ச நேரம் எடுக்கும்.

    மழை நீர் சேகரிப்பு திட்டம்

    மழை நீர் சேகரிப்பு திட்டம்

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை நோக்கி சிவப்பு தக்காளி வந்துவிட்டால், குறிப்பாக சென்னை எல்லையை அடைந்தால் மேகக் கூட்டங்கள் மிகவும் தீவிரமடையும். எனவே இந்த மழை நீரை மழை நீர் சேகரிப்பு திட்டத்தை பயன்படுத்தி சேமிக்க வேண்டும் என பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.

    English summary
    Tamilnadu weatherman tweets that KTC Rain Update - Slow moving Red Thakkalis have arrived and will have lot of Damal Dumeels. It took hours for the slow moving Red Thakkalis truck to arrive at our door step and as it neared KTC and particularly Chennai boundary, the clouds as usual were getting intense.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X