சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது சென்னைக்கானது அல்ல.. கஜாவால் கிடைக்கும் மழை போனஸ்தான்.. தமிழ்நாடு வெதர்மேன்

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று நாள் முழுவதும் மழை பெய்யுமா? | தமிழ்நாடு வெதர்மேன் மற்றும் வானிலை ஆய்வு மையம்- வீடியோ

    சென்னை: கஜாவால் சென்னை முதலில் மழை பெற்றுள்ளது. இது சென்னைக்கான புயல் அல்ல என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    வங்கக் கடலில் கஜா புயல் உருவானது. இந்த புயல் தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்தது. இந்நிலையில் இந்த பாதையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது மேற்கு திசை நோக்கி செல்கிறது.

    இந்நிலையில் இது இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.

    [கஜா.. மாலை 4 மணிக்குள், வீடு திரும்புங்க.. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்]

    மழை பெய்யும்

    மழை பெய்யும்

    இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு பதிவை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில் கஜா புயலால் சென்னை முதலில் மழையைப் பெற்றுள்ளது. கஜா புயல் கடற்கரையை நெருங்கும்போது, மற்ற மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

    மழை இருக்கும்

    மழை இருக்கும்

    உள்மாவட்டங்களான மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நாளை காலையில் இருந்து மழை பெய்யத் தொடங்கும். நாகை-வேதாரண்யம் இடையே இன்று நள்ளிரவு புயல் கரையைக் கடந்தபின் உள்மாவட்டங்களில் மழை இருக்கும்.

    மழை பெய்யும்

    மழை பெய்யும்

    கஜா புயல் தீவிரமடையும்போது, மேகக்கூட்டங்களை மிகநெருக்கமாக வைத்துக்கொள்ள முயற்சிக்கும். எப்படியாகினும், புல்-எஃபெட் மூலம், சென்னைக்கு அவ்வப்போது 16, 17-ம் தேதிவரை இடைவெளிவிட்டு மழை பெய்யும்.

    உருவாகும்

    உருவாகும்

    மீண்டும் சொல்கிறேன், இது சென்னைக்கான புயல் அல்ல, ஒருபோதும் அவ்வாறு வரவில்லை. நமக்கு இப்போது கிடைக்கும் மழை போனஸ் போன்றது, அடுத்த 3 நாட்களில் நமக்கானது கிடைக்கும். வட சென்னை மற்றும் வடமேற்கு சென்னை வழியாக மேகக் கூட்டங்கள் சென்றுள்ளன. இது போல் மேக கூட்டங்கள் இடைவெளி விட்டு உருவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu Weatherman says We have pull effect rains on 16/17th too which will give some more intermittent spells.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X