சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ச்சே ஜஸ்ட்மிஸ்.. இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை.. சென்னையில் 20-இல் நல்ல மழைக்கு வாய்ப்பு.. வெதர்மேன்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் ஒரு வாரம் மழை பெய்யும் - நார்வே வானிலை மையம்

    சென்னை: கடந்த 14 முதல் 16-ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஆந்திரன் நெல்லூர் மாவட்டத்திலும் சூப்பர் டூப்பர் மழை பெய்திருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் அரபிக் கடல், வங்கக் கடலில் உருவான புயல்களால் ஓரளவுக்கே மழை பெய்தது.

    இந்த நிலையில் மழை ஓய்வெடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. ஆனால் சென்னையில் இன்னும் எதிர்பார்த்தப்படி மழையை காணவில்லை.

    சாப்பிட கூட காசு இல்லை.. படிக்கத்தான் போராடுகிறோம்.. ஜேஎன்யூ போராட்டமும், பின்னணியும்!சாப்பிட கூட காசு இல்லை.. படிக்கத்தான் போராடுகிறோம்.. ஜேஎன்யூ போராட்டமும், பின்னணியும்!

    அறிக்கை

    அறிக்கை

    இதனால் இந்த ஆண்டு போல அடுத்த ஆண்டும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுவிடுமா என்ற அச்சம் சென்னைவாசிகளை தொற்றி கொண்டது. இதனால் வானத்தை பார்ப்பதைவிட வானிலை மையத்தின் அறிக்கையையும் வானிலை ஆய்வாளர்களின் போஸ்ட்களையும் மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

    ஜஸ்ட் மிஸ்

    ஜஸ்ட் மிஸ்

    இந்த நிலையில் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் கடந்த 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை கிழக்கு திசை காற்றால் பெய்யக் கூடிய மழையை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆந்திரத்தின் நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் ஜஸ்ட் மிஸ்ஸாகிவிட்டது.

    தமிழகம்

    தமிழகம்

    இந்த முறையும் கிழக்கு திசை காற்றால் பெய்யக் கூடிய மழை வட தமிழகத்திற்கு வருகிறது. இதனால் வரும் 20-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை சென்னை அல்லது ஸ்ரீஹரிகோட்டா பகுதிகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    மழை பெய்யும் என நாம் நம்புவோமாக! அதே சமயம் சூரிய வெளிச்சமும் இருக்கும். இது வெறும் கிழக்கு திசை காற்றால் பெய்யக் கூடிய மழை. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமோ அல்லது புயலாலோ பெய்யும் மழை அல்ல. எனவே சற்று குறைந்த அளவிலேயே நம்பிக்கை கொள்வோம். எந்த அளவு மழை பெய்தாலும் மகிழ்ச்சியாக இருப்போம்.

    டெல்டா மாவட்டங்கள்

    டெல்டா மாவட்டங்கள்

    அதேபோல் கடலோர மாவட்டங்களான கடலூர், பாண்டி, நாகை, திருவாரூர், டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்யும். இந்த ஆண்டு தூத்துக்குடி மற்றும் நெல்லை கனவு ஆண்டாகும். அது போல் கன்னியாகுமரி மாவட்டமும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு இன்று வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu Weatherman says that This time too the easterly wave is coming to NTN with dryline interaction happening close to Chennai / Sriharikota belt So between 20-23rd, there is chance for KTC to get rains.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X