சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில்... இன்று மழை வெயிட்டா இருக்கும்.. 14ம் தேதி லைட்டாகி.. 15ம் தேதி பிரித்தெடுக்குமாம்!

Google Oneindia Tamil News

சென்னை: நவம்பர் மாதம் 13-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் கனமழை பெய்யலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அது போல் இன்றைய தினம் சென்னையில் கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீபாவளி அன்று மட்டும் மழை விட்டு விட்டு குறைவாகவே பெய்யுமாம்.

Recommended Video

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழை - வீடியோ

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. தீபாவளிப் பண்டிகை 14-ஆம் தேதி கொண்டாடப்படுவதால் இந்த மழையால் பட்டாசுகளை வெடிக்க முடியாமல் போய்விடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஊட்டியான சென்னை.. மாநகர், புறநகரில் பரவலாக மழை.. ஆஃப் மோடில் ஏசி, ஃபேன்! ஊட்டியான சென்னை.. மாநகர், புறநகரில் பரவலாக மழை.. ஆஃப் மோடில் ஏசி, ஃபேன்!

    கடந்த ஆண்டு மழை

    கடந்த ஆண்டு மழை

    இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் கடந்த தீபாவளிப் பண்டிகை அன்று அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை நல்ல மழை பெய்து விருந்தளித்தது. இந்த முறையும் 11-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை மழையின் அளவு தீவிரமடையும்.

    டெல்டா மாவட்டங்கள்

    டெல்டா மாவட்டங்கள்

    இந்த முறை புதுச்சேரி முதல் டெல்டா மாவட்டங்கள் வரை நல்ல மழை பெய்யும். தெற்கு ஆந்திரம் காவாலியிலிருந்து கன்னியாகுமரி வரை நல்ல மழை பெய்யும். கடலோரம் மற்றும் தென்தமிழகத்தில் முதல் ஓரிரு நாட்கள் அதாவது 11 முதல் 13-ஆம் தேதி வரை மழை குறையும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் நல்ல மழை பெய்யும்.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    இன்றும் நாளையும் வெப்பச்சலனத்தால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, கடலூர், டெல்டா கடலோரப் பகுதிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி பகுதிகளில் நல்ல மழை பெய்யும். மக்களுக்கு ஒரு நல்ல செய்தி, தீபாவளி நாளன்று மழை குறையும்.

    தீவிரமடையும்

    தீவிரமடையும்

    தீபாவளியான 14-ஆம் தேதி அதிகாலையில் விட்டுவிட்டு மழை பெய்யக் கூடும். பின்னர் 15-ஆம் தேதி மழையின் அளவு வேகமெடுக்கும். மற்ற நாட்களை ஒப்பிடும் போது தீபாவளி தினத்தன்று மழை குறைவாகவே இருக்கும். 15-ஆம் தேதி தொடங்கும் மழை 18-ஆம் தேதி வரை தீவிரமடையும் என்றார் பிரதீப் ஜான்.

    English summary
    Tamilnadu Weatherman says that Today Chennai will get more rains. On Diwali it will become lighter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X