சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நிவர் புயல் கரையை கடந்த நிலையில் கடுங்குளிர் வீசுகிறது. புயலை நமக்கு வெகு அருகில் இருப்பதால் இந்த நிலை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை புதுவை அருகே கரையை கடந்தது. இதனால் நேற்று முதல் சென்னையில் மழை வெளுத்தெடுத்தது.

மழை பெய்த போது காற்று வீசினாலும் ஜில்லென இல்லை. இன்று நிவர் கரையை கடந்த நிலையில் காலை முதல் சென்னையில் மழை பல்வேறு இடங்களில் இல்லை.

வாவ்.. சென்னை பக்கிங்காம் கால்வாயில் அரிதான சிறிய சூறாவளி.. வீடியோ வெளியிட்ட வெதர்மேன்வாவ்.. சென்னை பக்கிங்காம் கால்வாயில் அரிதான சிறிய சூறாவளி.. வீடியோ வெளியிட்ட வெதர்மேன்

மலை பிரதேசம்

மலை பிரதேசம்

வானமும் வெளீர் என இருந்தது. இந்த நிலையில் மதியம் முதல் குளிர் வாட்டி எடுக்கிறது. ஏதோ மலை பிரதேசங்களில் இருப்பது போன்ற ஒரு எண்ணம் தோன்றுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக தகவலில், நிவர் புயலானது நம்மை வெகு விரைவில் கடந்து சென்றதால் அதிகமான குளிர் ஏற்பட்டுள்ளது. இது இயல்பான ஒன்று.

ஆந்திரா

ஆந்திரா

கடந்த 2018ஆம் ஆண்டு பெய்ட்டி புயல் ஆந்திரா அருகே கரையை கடந்த போதும் கூட இது போன்று ஒரு கடுங்குளிர் நிலவியது. குளிர்ந்த வெளிப்புற காற்று சென்னையில் வீசுகிறது. அதனால் இந்த குளிர் நிலவுகிறது. நிவர் புயலானது சென்னைக்கு வடக்கே உள்ளது. அதாவது ஆந்திரா அருகே உள்ளது.

மேகங்கள்

மேகங்கள்

இதனால் தென்மேற்கு திசையிலிருந்து மேகங்கள் உருவாகி காற்று வீசி வருகிறது. அதனால்தான் குளிர்ந்த காற்று வீசுகிறது என்றார் பிரதீப் ஜான். புதிதாக புரேவி என்ற ஒரு புயல் நவம்பர் 29-ஆம் ஆண்டு உருவாகிறது. இது எத்தகைய தன்மையை கொண்டது என தெரியவில்லை.

டெல்டா மாவட்டங்கள்

டெல்டா மாவட்டங்கள்

புரேவி புயல் ராமேஸ்வரம் அருகேயும், ராமநாதபுரம் அருகேயும் வேதாரண்யம் அருகேயும் நாகை அருகேயும் கரையை கடக்கும் என சாட்டிலைட் புகைப்படங்கள் கூறுகின்றன. ஆனால் எங்கு கரையை கடக்கும் என்பது போக போகத்தான் தெரியும். இந்த புயல் டெல்டா மாவட்டங்களுக்கு மழையை கொடுக்கும் புயலாக இருந்தால் நன்றாக இருக்கும்.

English summary
Tamilnadu Weatherman says why Chennai is getting cold winds? Its all because of Cyclone moves close to us.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X