புயல் பலவீனமடைய வாய்ப்பு இல்லை.. சென்னையில் மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்
சென்னை: நாகை முதல் சென்னை வரை தமிழ்நாட்டின் கடற்கரையோர பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்றும் நிவர் புயல் இன்று தீவிரம் அடையும் என்றும் பலவீனமடைவதற்கான அறிகுறிகள் இல்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நிலையில புயலாக இன்று காலை மாறியது. நிவர் புயல் மையம் சென்னைக்கு தென்கிழக்கே 450 கிமீ தொலைவில் இப்போது மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாளை புதுவை அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது 5 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.
நிவர் புயல்.. சென்னையிலிருந்து 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளும் நிறுத்தம்!

வெதர்மேன் அப்டேட்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,. நிவர் புயல் காரணமாக நாகை முதல் சென்னை வரை தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இன்று மழை பெய்யும். சில இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும்.

எவ்வளவு மழை
புயல் தீவிரம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னையை தவிரவேறு இடங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.
காலை 8.30 மணி வரை நிலவரப்படி சென்னையில் மழை அளவு (மிமீ). எம்.ஜி.ஆர் நகர் (கே.கே.நகர்) - 83. நுங்கம்பாக்கம் - 77, மீனம்பாக்கம் - 70, ஆலந்தூர் - 70
கேளம்பாக்கம் - 58, கோளப்பாக்கம் - 55, அயனாவரம் - 52

தரமணியில் மழை
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - 51, பெரம்பூர் - 40, இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (கேலம்பாக்கம்) - 39, சோமங்கலம் (மேற்கு தாம்பரம்) - 37, தரமணி - 35
செங்கல்பட்டு - 35, தண்டையார்பேட்டை -34, பூந்தமல்லி - 30, ரெட்ஹில்ஸ் - 28, அண்ணா பல்கலைக்கழகம் - 28, அம்பத்தூர் - 26, புழல் - 24
கொரட்டூர் - 24

புறநகர் பகுதிகளிலும் மழை
உத்திரமேரூர் - 24, டிஜிபி அலுவலகம் - 23, எண்ணூர் - 19, செம்பரம்பாக்கம் - 19, மதுராந்தகம் - 18, திருப்போரூர்- 13, ஸ்ரீபெரும்புதூர்- 13. திருவள்ளூர் - 11
கும்மிடிபூண்டி - 10, என மழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.