சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டை நோக்கி நகருது.. ஜனவரி 14 வரை வெளுக்க போகுது கனமழை.. வெதர்மேன் சூப்பர் அப்டேட்!

Google Oneindia Tamil News

சென்னை : கடலூர் முதல் கன்னியாகுமரி வரை ஜனவரி 10ம் தேதி (இன்று) முதல் ஜனவரி 14ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஜனவரியில் பெரிய அளவில் மழை இருக்காது. ஏன் மழை பெய்யும் வாய்ப்பு கூட பெரிதாக இருக்காது,

ஆனால் வடகிழக்கு பருவ மழை எப்போதாவது ஒரு சில வருடங்களில் தான் மிகப்பெரிய அளவில் ஜனவரியிலும் ஏற்படுத்தும்.

கனமழை

கனமழை

அந்த வகையில் இப்போதுவரை வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் நீடிக்கிறது. பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர் முதல் கன்னியாகுமரி வரை ஜனவரி 10ம் தேதி (இன்று) முதல் ஜனவரி 14ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு வருது

தமிழ்நாட்டுக்கு வருது

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், இந்த ஜனவரியில் மழை தொடர்கிறது. ஜனவரி முதல் வாரம் மழை கிழக்கு பகுதியில் இருந்து காற்றழுத்தத்தால் வந்தது. இப்போது இலங்கையின் தென்கிழக்கில் தெளிவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த முறை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றின் ஈரப்பதத்தை தமிழ்நாட்டின் கடற்கரைக்கு தள்ளுகிறது.

அதிக மழை பெய்யலாம்

அதிக மழை பெய்யலாம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கையின் தெற்கிலிருந்து குமரி (கன்னியாகுமரி) கடலுக்கு தெற்கே, மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது கன்னியாகுமரி கடற்கரைக்கு அருகில் அமைந்திருக்கிறது. கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், மிக மெதுவாக நகர்வதால் அடுத்த 4 நாட்களுக்கு அதிக மழை பெய்யலாம். ஏன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக கூட மாறலாம்.

வெதர்மேன் தகவல்

வெதர்மேன் தகவல்

எனவே ஆரம்பத்தில் பரவலான மற்றும் கனமழை கடலோர (கடலூர முதல் தூத்துக்குடி) மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகத்தில் பெய்யும், ஆனால் வளிமண்ல மேலடுக்கு சுழற்சி மேலும் மேற்கு நோக்கி நகரும்போது, தெற்கு, உள் தமிழகம்., மேற்கு தமிழகம் பகுதியிலும் மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 முதல் 3 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடதமிழகத்திலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

English summary
tamilnadu weathermen rain alert: Heavy Rainfall expected between 10-14th January in Cuddalore to Kayakumari districts. initially the widespread & heavy rains will be concentrated in coastal (Cuddalore to Thoothukudi) and south TN, but when UAC moves more west, the easterlies will surge / converge move inside and even South Interior Tamil Nadu, Interior Tamil Nadu, West Tamil Nadu will get rains.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X