சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மழை முக்கியம் இல்ல.. மேட்ச் தான் உங்களுக்கு முக்கியமா.. நெட்டிசன்களை விளாசிய வெதர்மேன்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை.. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!

    சென்னை: மழை முக்கியம் இல்ல.. மேட்ச் தான் உங்களுக்கு முக்கியமா என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நெட்டிசன்களை விளாசியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது.

     Tamilnadu weathermen Surprised to see comments like rain rain go away in Chennai over ipl match

    இந்த போட்டியில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணி வென்றால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை தோல்வி அடைந்தால் டெல்லி அல்லது ஹைதரபாத் அணியுடன் மோதி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    இந்நிலையில் தமிழகத்தில் தர்மபுரி, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று வெப்பசலனம் காரணமாக மழை பெய்தது. சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சூப்பர் முதல்வர்.. புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு ஒரு வருட சம்பளத்தை தருகிறார் நவீன் பட்நாயக்! சூப்பர் முதல்வர்.. புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு ஒரு வருட சம்பளத்தை தருகிறார் நவீன் பட்நாயக்!

    இன்று சென்னையில் ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கும் முன்பாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை பார்த்த ஐபிஎல் ரசிகர்கள் சிலர், மழை பெய்தால் போட்டி நடக்காது என்று வருத்தப்பட்டதோடு, மழையே இப்போதைக்கு வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

    இதனை பார்த்து வேதனை அடைந்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மழையே வேண்டாம் என்ற ரீதியில் சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருவது வியப்பாக இருக்கிறது. அவர்களுக்கு மழை முக்கியம் இல்ல.. மேட்ச் தான் வேணும் போல.. என்று தனது பேஸ்புக் பக்கத்தில் விளாசியுள்ளார்.

    English summary
    tamilnadu weathermen says in facebook, "Surprised to see comments like rain rain go away.....rain mukkiyam illa pola....match thaan venum pola"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X