சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போற போக்கைப் பார்த்தா.. டிரோன்களின் சொர்க்கபுரியாக மாறிடும் போலயே தமிழ்நாடு.. சூப்பர் வேகம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாநிலத்தை ட்ரோன் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது.

அறிவியல் வேகமாக வளர்ந்து வருகிறது. அனைத்திலும் புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. அந்த காலத்தில் நாற்று நடுதல், களை பறித்தல், அறுவடை செய்தல் உள்ளிட்டவற்றை கூலியாட்கள் கொண்டு செய்யப்பட்டன.

ஆனால் தற்போது அவை எல்லாவற்றிற்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. அந்த வகையில் விமானங்களில் சரக்குகளையும் பயணம் செய்யவும் போரிடவும் மட்டுமே இருந்த நிலையில் தற்போது டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் இன்று பல்வேறு துறைகளில் பயன்பட்டு வருகின்றன.

சென்னை வேண்டாம்... கோயம்புத்தூருக்கே போகலாம்... ரிஷிவந்தயம் எம்.எல்.ஏ. கொரோனா சிகிச்சை பின்னணி சென்னை வேண்டாம்... கோயம்புத்தூருக்கே போகலாம்... ரிஷிவந்தயம் எம்.எல்.ஏ. கொரோனா சிகிச்சை பின்னணி

பேரிடர்

பேரிடர்

வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், வனத்துறை, வனஉயிரி, கல்வி, ஊரக வளர்ச்சி, போக்குவரத்து மேலாண்மை, சுரங்கம் ஆகிய துறைகளில் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண்துறையில் டிரோன்கள் திறம்பட செயல்படுகின்றன. பயிர்களுக்கு பூச்சிக் கொல்லிகளை டிரோன்கள் மூலம் தெளிக்கலாம்.

மருந்துகள்

மருந்துகள்

பூச்சிக்கொல்லிகளை மனிதர்கள் அடிக்கும் போது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். டிரோன்களால் அவை ஏற்படாது. குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவுகளில் டிரோன்கள் மருந்துகளை அடிக்கும். அது போல் வெட்டுக்கிளி உள்ளிட்ட பூச்சிகளை கட்டுப்படுத்தவும் இந்த டிரோன்களை கொண்டு பூச்சி மருந்து அடிக்கலாம்.

நடமாட்டத்தை

நடமாட்டத்தை

இவ்வளவு ஏன் கொரோனா வைரஸ் பல்கி பெருகி வரும் நிலையில் வீடுகள், உயர்ந்த கட்டடங்களில் டிரோன்கள் மூலமே கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகின்றன. தமிழகத்திற்கு அதிக அளவிலான டிரோன்கள் தேவைப்படுகின்றன. குடிமராமத்து பணிகளும் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் விஐபிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அவர்களுக்கு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் பயன்படுகிறது.

டிரோன் உற்பத்தி

டிரோன் உற்பத்தி

மருத்துவத் துறையில் உறுப்புகளை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு விரைவாக கொண்டு செல்ல இவை உதவுகின்றன. இவை மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கக் கூடும். இதனால் அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கி தொழில்நுட்பத்தை கொண்டு தமிழகத்தை டிரோன் உற்பத்தி மையமாக மாற்ற சாத்தியக் கூறுகளை தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது.

Recommended Video

    தைலக்காட்டில் உல்லாசம்... டிரோனை பார்த்ததும் தலைதெறிக்க ஓடிய ஜோடி
    விரைவில்

    விரைவில்

    மாநில வளர்ச்சி கொள்கை கவுன்சில் இது தொடர்பாக ஒரு ஆலோசனையை நடத்தியுள்ளது. எனவே விரைவில் டிரோன்களின் சொர்க்கபுரியாக தமிழகம் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தமிழகம் நவீன தொழில்நுட்பத்தில் சூப்பர் வேகத்தில் முன்னேறி வருகிறது.

    English summary
    Tamilnadu will become drone manufacturing hub . They are used in various sectors like Agriculture, Disaster Management.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X