சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த 48 மணி நேரம்.. தீவிர காற்று வீசும்.. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய போகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாகவும், வானிலை மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

அதேபோல் இன்னொரு பக்கம் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் தீவிரமாக கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்து வருகிறது.

முழு ஊரடங்கு.. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்.. மீறினால் தடியடி! முழு ஊரடங்கு.. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்.. மீறினால் தடியடி!

சென்னை

சென்னை

நேற்று தமிழகத்தில் சென்னையிலும் மிக தீவிரமாக கனமழை பெய்தது. நேற்று இரவு வரலாறு காணாத அளவிற்கு சென்னையில் மழை பெய்தது. இந்த வார தொடக்கத்தில் இருந்தே சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய போகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

எங்கு எல்லாம்

எங்கு எல்லாம்

வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வேறு எங்கு எய்யும்

வேறு எங்கு எய்யும்

அதேபோல் இன்னொரு பக்கம் இந்திய பெருங்கடல் மற்றும் வங்க கடல் கொந்தளிப்புடன் காண வாய்க்காப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. கடல் அலை சுமார் 3.5 மீட்டர் உயர் வரை வாய்ப்புள்ளது. குமரி அருகே கடல் கொந்தளிப்புடன் காண வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில்

சென்னையில்

சென்னையில் நாளை மாலைக்கு பிறகு, இன்று நள்ளிரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற நேரங்களில் அதிக வெயில் இல்லாமல், மேக மூட்டத்துடன் வானம் காணப்படும். அதேபோல் கடலோர மாவட்டங்களில் தீவிர காற்று வீச வாய்ப்புள்ளது. 40-50 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் காற்று வீசும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

English summary
Tamilnadu will see rain for next 48 hours straight in many parts due to monsoon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X