சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போகுமிடமெல்லாம் பாட்டிகளை கொஞ்சி.. குட்டீஸ்களை இடுப்பில் தூக்கி வைத்து கொள்ளும் தமிழிசை, ஜோதிமணி

குழந்தைகளை தமிழிசை சவுந்தராஜன், ஜோதிமணி இருவரும் இடுப்பில் வைத்து கொஞ்சி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: கண்ணுல படும் ஒரு பாட்டி, குழந்தையைகூட விடுவது இல்லை.. உடனே கட்டிப்பிடித்து முத்த மழை பொழிவதுதான் தமிழிசை சவுந்தராஜன், ஜோதிமணியின் முக்கிய வேலையாக இருக்கிறது!

ட்விட்டரில் எப்பவுமே சண்டை போட்டு கொள்பவர்கள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனும், காங்கிரசின் ஜோதிமணியும்! இதற்கு காரணம் இவர்கள் சார்ந்துள்ள கட்சிதான்!

இப்போது இருவருமே அந்தந்த கட்சியின் வேட்பாளர்களாகி விட்டார்கள். ஆளுக்கொரு பக்கம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

என் பிணத்தின் மீது ஏறிப் போய் ஸ்டெர்லெட்டை திறந்துக்கங்க.. நாம் தமிழர் வேட்பாளர் ஆவேசம் என் பிணத்தின் மீது ஏறிப் போய் ஸ்டெர்லெட்டை திறந்துக்கங்க.. நாம் தமிழர் வேட்பாளர் ஆவேசம்

கொஞ்சல்தான்

கொஞ்சல்தான்

ஆனால் ஒரேயொரு ஒற்றுமை என்னவென்றால், பிரச்சார பாணி கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கிறது. வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் குழந்தைகளை கண்டால் இருவருமே மறக்காமல் இடுப்பில் தூக்கி வைத்து கொள்கிறார்கள். போதுமான அளவு கொஞ்சி மகிழ்கிறார்கள். அந்த குழந்தைகளும் இவர்களிடத்தில் நன்றாகவே ஒட்டிக் கொள்கின்றன.

 ஆரத்தழுவி முத்தம்

ஆரத்தழுவி முத்தம்

அதேபோல பாட்டிகளை கண்டாலும் ஆரத்தழுவி கொள்கிறார்கள். இதை போட்டோவும் எடுத்து ட்விட்டரில் போட்டுக் கொள்கிறார்கள். அதிலும் ஜோதிமணியோ "இந்தப் பாட்டியின் கோரிக்கைகளும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்" என்று பதிவே போட்டுவிட்டார்.

 அந்நியத்தனம்

அந்நியத்தனம்

தமிழிசை ஆகட்டும், ஜோதிமணி ஆகட்டும் மக்களிடையே எளிமையாக பேசுவதுதான் இவர்களின் பிளஸ் பாயிண்டே! தலைவர்கள் ஆயிற்றே.. சற்று தள்ளி நிற்போம்.. என்ற அந்நியத்தனம் இவர்கள் இருவரிடம் மக்களுக்கு வரவே இல்லை. செல்லும் இடங்களிலும் இரு பெண்களையும் மக்கள் ஆரத்தழுவி வரவேற்கிறார்கள்!

 யாருக்கு வெற்றி

யாருக்கு வெற்றி

தொகுதி மக்களின் அன்பில் இருவருமே நனைந்தபடியே வாக்கு சேகரித்து வருகிறார்கள். பார்ப்போம்.. யார் வெற்றிக்கனியை பறித்து கொண்டு வருகிறார்கள் என்று!

English summary
During the Compaign, BJP Candidate Tamizhisai Soundarajan and Congress candidate Jothimani are getting closer to the people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X