சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நேற்று அமித் ஷா வந்தாரா.. ஓ.பி.எஸ்ஸை பார்த்தாரா.. இன்று முதல்வருடன் தமிழிசை திடீர் சந்திப்பு!

தமிழக முதல்வருடன் தமிழிசை சவுந்தராஜன் நேரில் சந்தித்து பேசினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓ.பன்னீர் செல்வம் - அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன?- வீடியோ

    சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் திடீரென சந்தித்து பேசியுள்ளார்.

    பாமகவை இணைத்து கூட்டணிக்குள் கொண்டு வந்த அதிமுக அரசு, அடுத்து பாஜகவையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து அக்கட்சிக்கு 5 இடங்கள் கொடுத்து மெகா கூட்டணியாக உருவாகி நிற்கிறது. இது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாக பேசப்படுகிறது.

    எச்.ராஜா

    எச்.ராஜா

    வெறும் 5 தொகுதிகள் ஒதுக்கிய நிலையிலும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போதும், பாஜகவின் முக்கியத்துவம் குறைந்து காணப்பட்டதாக ஒரு பேச்சு எழுந்தது. அதற்கு ஏற்றபடி எச்.ராஜா பேச்சுவார்த்தையில் இடம் பெறாமல் இருந்ததும், பாமக நடத்திய விருந்தில் அதிமுகவின் நெருக்கமும் இந்த சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவதாக இருந்தது.

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

    இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வந்திருந்தார். அவரை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் 2 முறை சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு, விஜயகாந்த் பிடிவாதம் உள்ளிட்டவை பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

    நேரில் சந்திப்பு

    நேரில் சந்திப்பு

    இந்த பின்னணியில் இன்று தமிழக முதல்வரை தமிழிசை சவுந்தராஜன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த அவசர சந்திப்புக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை.

    தொகுதி நிலவரம்

    தொகுதி நிலவரம்

    எனினும் தேமுதிகவின் நிலைகுறித்து அறியவும், பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் நிலவரத்தை அறிந்து கொள்ளவும் முதல்வரை தமிழிசை சவுந்தராஜன் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    English summary
    Tamizhisai Soundarajan meet Chief Minister Edapadi Palanisamy today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X