சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்

கஜா புயல் குறித்து தமிழிசை எழுதிய கவிதைக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: "மழையே....மழையே...குளங்களை..நிரப்பு.. என் மக்களின்....கண்களை குளமாக்காதே.." என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனை பற்றியும், அரசியல் உள்ளிட்ட அவரது இலக்கிய தாகத்தை பற்றியும், எழுதிய நூல்களை பற்றியும் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம்...மகள் தமிழிசைக்கும் கவிதைகள் என்றால் உயிர் என்பது!!

குடிகுடிக்க தடையில்லை?

குடிகுடிக்க தடையில்லை?

சில நேரங்களில் ஒத்தை வரிகளில் சொல்ல வந்த விஷயத்தை நச்சென்று சொல்லி விட்டும் போவார் தமிழிசை. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டதற்குகூட, தனது ட்விட்டர் பக்கத்தில் "வெடி வெடிக்க தடை.. குடி குடிக்க தடையில்லை" என்று பதிவிட்டிருந்தார்.

கண்களை குளமாக்காதே

இப்போது கூட புயல் சம்பந்தமாக ஒரு கவிதை பதிவிட்டு இருக்கிறார். கஜா புயலால் நிர்க்கதியாக நிற்கும் மக்களை நிலையை அதில் தெரிவித்துள்ளார். "மழையே.... மழையே... குளங்களை.. நிரப்பு.. என்மக்களின்.... கண்களைக் குளமாக்காதே.." என்று கூறியுள்ளார்.

பக்குவ முதிர்ச்சி

பக்குவ முதிர்ச்சி

அதேபோல, தன் மீதான குற்றச்சாட்டுகளையும், பொதுமக்களின் விமர்சன பதிவுகளையும் பக்குவமாகவே இவர் அணுகி வருகிறார். மரியாதைக்குரிய வகையிலேயே எதிர்தரப்பினருக்கும் பதிலளித்து வருகிறார். இது அவருடைய இயல்பு ஆகும். இப்படித்தான் கஜா புயல் பாதித்த மக்களை சந்திக்க சென்ற தமிழிசையையும் இணையத்தில் சிலர் விமர்சித்தனர்.

எதிர்மறை கருத்துக்கள்

இதற்கு பதிலடி கொடுத்து ஒரு ட்வீட் போட்டுள்ளார் தமிழிசை. அதில், "பரிதவிப்பில் பங்கெடுப்பதை.. ஆறுதலாகவும்.. உதவிக்காகவும் பதிவிடுவதை பரிகசித்தும் கிண்டலடித்தும் நக்கலடித்தும் பதிவிடுபவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. புயல் களத்திலேயே தங்கியிருக்கிறேன்.எதிர்மறை கருத்துகளை பதிவிடுபவர்கள் என்னை களங்கப்படுத்தவும் முடியாது கலங்கடிக்கவும் முடியாது." என்று தெரிவித்துள்ளார்.

தமிழிசையின் இந்த ட்வீட்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

English summary
Tamizhisai Soundarajan's Poem about Cyclone Gaja Victims
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X