சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோயிலுக்குள்ள பிரச்சாரமா.. சூப்பர்.. ஆனா நாங்க ஓட்டு போட மாட்டோம்.. கலகலக்கும் தமிழிசை ட்வீட்

தூத்துக்குடியில் பசும்பொன் தேவர் சிலைக்கு தமிழிசை சவுந்தராஜன் மரியாதை செலுத்தினார்

Google Oneindia Tamil News

Recommended Video

    கோயிலுக்குள்ள பிரச்சாரமா? சூப்பர்!-வீடியோ

    சென்னை: பிரதமர் மோடியை எத்தனை பேருடன்தான் தமிழிசை ஒப்பிடுவாரோ தெரியாது.. காமராஜருடன் ஒப்பிட்டு பேசினார். இப்போது பசும்பொன் தேவருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

    தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களம் இறங்க போகிறார் என்பது 3 நாளாக கம்பார்ம் ஆகி வருகிறது. இந்த தொகுதியில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நாளாக சென்று மக்களை சந்தித்தும், கட்சி கொடியை ஏற்றி வைத்தும் வருகிறார்.

    செல்லும் இடமெல்லாவும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றும் புளியங்குளம் பகுதிக்கு தமிழிசை சென்றுள்ளார். இதுகுறித்த பதிவு ஒன்றையும் ட்வீட் செய்துள்ளார்.

    எம்எல்ஏவே இல்லாத கட்சி.. தம்பிதுரை தாக்கு.. பிரேமலதாவிற்கு அதிமுக தலைவர்கள், அமைச்சர்கள் பதிலடி எம்எல்ஏவே இல்லாத கட்சி.. தம்பிதுரை தாக்கு.. பிரேமலதாவிற்கு அதிமுக தலைவர்கள், அமைச்சர்கள் பதிலடி

    சிறப்புரை

    அதில், "தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி புளியங்குளத்தில் அய்யா.முத்துராமலிங்க தேவர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்களிடத்தில் சிறப்புரை ஆற்றியபோது..." என்று பதிவிட்டுள்ளார்

    பிரமாண்டமான ஆட்சி

    பிரமாண்டமான ஆட்சி

    தேவர்சிலைக்கு மாலை அணிவித்தவுடன் அங்கிருந்த தொண்டர்களிடம் பேசும் வீடியோ ஒன்றையும் தமிழிசை பதிவிட்டுள்ளார். அதில், "மத்தியில் பிரதமர் ஐயா மோடி மீண்டும் பிரதமராக வரணும். மாநிலத்தில் ஐயா ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து பணியாற்றி பிரமாண்டமான ஆட்சியை நடத்தணும். மத்தியிலும் நம்ம ஆட்சிதான், மாநிலத்திலும் நம்ம ஆட்சிதான்.

    தெய்வீகம்

    தெய்வீகம்

    இந்த பகுதியிலும் நம்ம ஆட்சிதான். தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என்று தேவர் ஐயா சொன்னார். தேவர் ஐயா என்ன நினைச்சாரோ, அதைத்தான மோடி ஐயா செய்து கொண்டிருக்கிறார். அதனால மத்தியில தாமரை வரணும், மாநிலத்தில இரட்டை இலை வரணும், அதுக்கு இந்த தொகுதியில் பாஜக நிற்க வாய்ப்பு உள்ளதால் நீங்க வெற்றி பெற செய்யணும்" என்றார்.

    பிரச்சாரமா?

    பிரச்சாரமா?

    தமிழிசையின் இந்த பதிவுக்கு கீழே, "கோயிலுக்குள்ள பிரச்சாரமா?" என்றும், "சூப்பர்,.. ஆனா நாங்க ஓட்டு போட மாட்டோம்" என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

    English summary
    BJP State President Tamizhisa Soundarajan compared Pasumpon Devar and PM Modi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X