சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழிசை தைரியமான ஸ்டாண்ட் எடுக்க வேண்டும்.. மக்கள் எதிர்பார்ப்பு!

பொள்ளாச்சி சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சி விவகாரம் பற்றி வாய் திறக்காத தமிழிசை- வீடியோ

    சென்னை: இருதலை கொள்ளி எறும்பாக தவித்து வருகிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன்! மனசாட்சியை பார்ப்பதா? அல்லது ஆட்சியை பார்ப்பதா என்ற தடுமாற்றத்தில் சிக்கி தவிக்கிறார்.

    பொள்ளாச்சி சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஒரு பெண்ணாக இருந்தும் தமிழக பாஜக தலைவர் கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே, குற்றமிழைக்க காரணமான கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளாரே என்று நெட்டிசன்கள் நேற்று தாறுமாறாக கேள்வி எழுப்பினார்கள்.

    முதல் விஷயம், தவறு செய்தது கூட்டணி கட்சியிலுள்ள ஒரு பிரமுகரின் மகன் என்ற இது ஒன்றைதவிர, இந்த பொள்ளாச்சி சம்பவத்துக்கும் தமிழிசைக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

    பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் 100 பெண்கள் எல்லாம் பாதிக்கப்படவில்லை.. ஆட்சியர் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் 100 பெண்கள் எல்லாம் பாதிக்கப்படவில்லை.. ஆட்சியர்

    மக்கள் நம்பிக்கை

    மக்கள் நம்பிக்கை

    ஆனால் நேற்றுதான் ஒரு விஷயம் புரியவந்தது, எத்தனையோ தலைவர்கள் இருந்தும் மக்கள் தமிழிசை மேல் எவ்வளவு நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் இதுவரை வைத்திருந்திருக்கிறார்கள் என்பது. அதனால்தான், அவ்வளவு கோபமும், எரிச்சலும், பாசமும், உரிமையுமாய் கலந்து ட்வீட்கள் வந்தன.

    நிர்ப்பந்தம்

    நிர்ப்பந்தம்

    ஆனால் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தமிழிசை இதனை கண்டித்து ட்வீட் போட்டார். கூட்டணி கட்சிக்கு சாதகமாகவும் பேச முடியாமல், பொதுமக்களின் கேள்விகள், எதிர்ப்புகளுக்கு பதில்களையும் சொல்லவும் முடியாமல் இப்போதுத தவித்து வருகிறார். இன்றைக்கு 3 ட்வீட்களுக்கு மேல் பொள்ளாச்சி சம்பவம் சம்பந்தமாகவே போடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி உள்ளார்.

    அதிர்வுகள்

    அந்த ட்வீட்களில், "பொள்ளாச்சியின் அதிர்வு இதயத்துடிப்பை அதிர்வடையச்செய்கிறது. குற்றவாளிகள் தயவுதாட்சணியமில்லாமல் தண்டிக்கப்படவேண்டும். பிறக்காத பெண் சிசு கூட கலைக்கப்படக் கூடாது என்றிருக்கும் என் தேசத்தில், எங்கள் பெண் குழந்தைகளின் தேகங்கள் சிதைக்கப்படும்போது எப்படித் தாங்குவது எரிமலையாய் வெடிப்போம்.

    கழுகுகள்

    அதேநேரத்தில் எங்கள் பெண் குழந்தைகளின் ஓலத்தை அரசியலாக்காதீர்கள், போராட்டங்களைவிட போராட்டமான அவர்களின் வாழ்க்கையை மீட்டெடுப்போம்.

    நம்பிக்கை

    இன்றிலிருந்து எம் கடமை, வெளிச்சத்திற்கு கொண்டு வராமல் அந்த வெள்ளை உள்ள இளம் தளிர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க மருத்துவ ரீதியாகவும் மன ரீதியாகவும் அந்தக் கொடுஞ்சம்பவங்களின் மனநிலையிலிருந்து மீட்டு மருந்தாக இருந்து மனக்காயங்களையும் உடல்காயங்களையும் மறக்க வைத்து பட்ட துன்பம் மறைந்து குதித்தோடி பட்டாம்பூச்சிகளாக பறக்கவைத்து அதேநேரத்தில் கொத்த வந்தால் கழுகுகளாக மாறிக் குத்திக் குதறுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுவது என் வேலை" என தமிழிசை பதிவிட்டுள்ளார்.

    வயிறு எரியாதா?

    வயிறு எரியாதா?

    இதிலிருந்து தமிழிசை என்ன சொல்ல வருகிறார் என்றால், பெண்குழந்தைகள் நலன் அவசியம் என்று சொல்லும் அதே வேளையில் "போராட்டங்கள் வேண்டாம், பெண் குழந்தைகளின் ஓலத்தை அரசியலாக்காதீர்கள்" என்கிறார். போராட்டங்கள் நடத்தாமல் எப்படி இருக்க முடியும்? குற்றவாளிகளில் ஒருவருக்கு மட்டும் ஜாமீன் என்றால் அங்கு அரசியல் இல்லையா? பெண்ணை பெற்றவர்களின் வயிறு எரியாதா?

    போராட்டங்கள்

    போராட்டங்கள்

    அரசியல் தலையீடுகள் இருக்கும்வரை அரசியலாக்குவதும் இருக்கத்தான் செய்யும், உரிய தண்டனைகள் கிடைக்கும்வரை போராட்டங்களும் நடக்கத்தான் செய்யும். கூட்டணி கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்ள ஆயிரம் வழிகள் இருக்கும்போது, இந்த விஷயத்தில் சாதகமான கருத்து சொல்லி மக்களின் வெறுப்பை மேலும் சம்பாதித்து விடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும். இந்த எதிர்பார்ப்பும் தமிழிசையின் அந்த நல்லுள்ளத்துக்காகத்தான்!

    English summary
    BJP State President Tamizhisai Soundarajan Should take bold actions against Pollachi Incident
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X