சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சதிகளை கடந்தவர் எடப்பாடி.. தமிழிசை வாழ்த்து.. இது எங்க போயி முடிய போகுதோ.. இது நெட்டிசன்கள்

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழிசை சவுந்தராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "சதிகளை கடந்து.. நல்ல திட்டங்களை தந்து.. சோதனைகளை சாதனையாக்கி.. மக்கள் மனம் கவர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கள்" என்று தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.

அதிமுக-பாஜக கூட்டணி இழுபறியில் உள்ளது. பாஜக கேட்ட சீட்டுகளையும், குறிப்பாக சில முக்கிய தொகுதிகளை தர முடியாத சூழலில் அதிமுக உள்ளது.

இதனால் இன்று, அல்லது நாளை திரும்பவும் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளது. அதில் பாஜக கேட்கக்கூடிய தொகுதிகள் கிடைக்குமா, அல்லது அதிமுக மறுப்பு சொல்லுமா என தெரியவில்லை.

தமிழிசை

தமிழிசை

இந்தநேரத்தில் தமிழக முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் வாழ்த்து ஒன்றினை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்று இன்றுடன் 2 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

வாழ்த்து

வாழ்த்து

இதையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் சாதனைகள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் சிடி வெளியிடப்பட்டது. 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வருக்குதான் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்துக்களை கூறியுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சாதனைகள்-சோதனைகள்

சாதனைகள்-சோதனைகள்

"சவாலான சூழலில் பதவியேற்றபோது தொடர்வாரா என்று பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் தொடர்ந்து பல சவால்களையும், சதிகளையும் கடந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தந்து பல சோதனைகளை சாதனையாக்கி திறமையான மக்கள் மனம் கவர்ந்த முதல்வராக 3-வது ஆண்டில் தொடரும் முதல்வருக்கு வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

கூட்டணிக்காக?

தமிழிசையின் இந்த ட்விட்டர் பதிவுக்கு கீழே பலர் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். "கூட்டணிக்காக எப்படியெல்லாம் பேச வேண்டி இருக்கு", "இது எங்க போயி முடிய போகுதோ" என்றெல்லாம் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

English summary
Tamizhisai Soundarajan congratulated TN Chief Minister Edappadi Palaniswami
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X