சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூரிய கிரகணத்தின் போது தருமபுரி, நெல்லையில் உலக்கை செங்குத்தாக நிற்கும் அரிய காட்சி

Google Oneindia Tamil News

சென்னை: சூரிய கிரகணத்தின்போது தருமபுரியில் உலக்கை செங்குத்தாக நிற்கும் அரிய காட்சி வைரலாகி வருகிறது.

அபூர்வமான சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. பூமி, சூரியன், நிலவு ஆகியன நேர்க்கோட்டில் வருவதுதான் சூரிய கிரகணம். இந்த ஆண்டின் முதல் கிரகணம் இன்று இந்தியாவில் காலை 9.58 மணிக்கு தொடங்கியது.

சுமார் 6 மணி நேரம் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இது இந்தியாவில் தெரியும் கடைசி சூரிய கிரகணம் ஆகும். இதன் பின்னர் அடுத்த கிரகணம் வரும் 2022 ஆம் ஆண்டுதான் இந்தியாவில் தெரியும்.

சூரிய கிரகணம் 2020: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் மட்டும் சிறப்பு பூஜை ஏன் தெரியுமா சூரிய கிரகணம் 2020: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் மட்டும் சிறப்பு பூஜை ஏன் தெரியுமா

தருமபுரி

தருமபுரி

இந்த நிலையில் கிரகணத்தின் போது தருமபுரியில் ஒரு வீட்டில் உலக்கை செங்குத்தாக நிற்கும் காட்சி அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக உலக்கையின் முனை தட்டையாக இருக்காது. அதனால் இது செங்குத்தாக நிற்க வைக்க முடியாது. ஆனால் கிரகணத்தின்போது இந்த உலக்கை செங்குத்தாக நிற்கும்.

உலக்கை

உலக்கை

கிரகணம் முடிந்த பிறகு இது தானாக விழுந்துவிடும். பழங்காலங்களில் இது போன்ற செய்முறை விளக்கங்கள் மூலமே கிரகணம் ஏற்படுவதையும் முடிவதையும் மக்கள் கண்டறிந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கிராமப்புறங்களில் உலக்கையை நிற்க வைக்கும் காட்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

முனை தட்டையாக

முனை தட்டையாக

அது போல் அம்மிக்கல்லையும் கிராம மக்கள் செங்குத்தாக நிற்க வைப்பர். அம்மிக்கல்லின் முனையும் தட்டையாக இருக்காது. எனினும் அந்த அம்மிக்கல்லும் கிரகணத்தின் போது நிற்கும். அது போல் நெல்லை, திருப்பூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் உலக்கையை செங்குத்தாக நிற்க வைக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Recommended Video

    நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வீட்டில் இருந்தே கண்டு ரசிக்க சில ஐடியாக்கள்
    தாம்பாலத்தில் நிற்கும் உலக்கை

    தாம்பாலத்தில் நிற்கும் உலக்கை

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தாம்பால தட்டில் ஆரத்தி கரைக்கப்பட்டு அதில் உலக்கையை நிற்கு வைத்துள்ளனர். இந்த நிகழ்வை கிராம மக்கள் கண்டு களித்தனர். இதுதொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

    English summary
    Solar Eclipse 2020: Tanjore, Nellai, Theni, Tiruppur people made Ulakkai to stand in a big plate. Its a scientific experiment for eclipse occurs and ended.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X