சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டைம் சரியில்லை".. டாஸ்மாக் கடையின் விற்பனை நேரத்தை எதிர்த்து ஹைகோர்ட்டில் புதிய மனு

டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் மூடப்பட்டது.. பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, தொற்று ஓரளவு குறைந்தது..

மணப்பாறையில் மேக வெடிப்பு போன்றதொரு மழை.. 3 மணி நேரத்திற்கு நகராத மேகங்கள்.. வெதர்மேன் போஸ்ட் மணப்பாறையில் மேக வெடிப்பு போன்றதொரு மழை.. 3 மணி நேரத்திற்கு நகராத மேகங்கள்.. வெதர்மேன் போஸ்ட்

இதனால், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன... பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அதன் நேரங்களும் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வந்தன..

டாஸ்மாக் கடைகள்

டாஸ்மாக் கடைகள்

ஆனால், கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்து வருகின்றன. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த நேரம் மாற்றியமைக்கப்பட்டது.. டாஸ்மாக் கடைகள் கொரேனா தொற்று முன் இருந்தது போல் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. மேலும் இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மதுவிற்பனை

மதுவிற்பனை

கொரோனா காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை குறைந்ததால் நஷ்டம் ஏற்பட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்தது... எனவே, இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்பதால் அதன் வருமானம் அதிகரிக்ககூடும். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றவும் அனைத்து டாஸ்டாக் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றாலும், டாஸ்மாக் கடைகளின் பணிநேரம் காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்ததை, 12 மணிமுதல் இரவு 10 வரை மாற்றியதற்கு தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஹைகோர்ட்

ஹைகோர்ட்

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "தொழில் தகராறு சட்டம் பிரிவு 9 உட்பிரிவு ஏ ன் கீழ், தொழிற்சங்க சட்டத்தின்படி, வேலை நேரம் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு 21 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று விதி உள்ளது.. எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தன்னிச்சையாக வேலைநேரம் மாற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோதம்

சட்டவிரோதம்

இது சட்டவிரோதம்.. எனவே, இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட வேண்டும்.. இரவு 10 மணி என்பது மக்கள் நடமாட்டம் குறைவான நேரம்.. பணப்புழக்கம் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது' என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மனுவானது நீதிபதி பார்த்திபன் முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

English summary
TASMAC: Change in opening hours of Tasmac shops and filed case in High court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X