சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் போராட்டத்தில் குதிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள்.. 6000 கடைகள் மூடப்படும்.. குடிமகன்கள் ஷாக்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: தமிழகத்தில் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ராஜவேல் தெரிவித்தார்.

டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது என்று விழுப்புரத்தில் இன்று அவர் கூறினார்.

Tasmac employees will be enter in strike on January 8 and 9th

இந்த போராட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கங்களின் 11 சங்கங்கள் ஒருங்கிணைந்து ஈடுபட உள்ளன. மொத்தம் 27 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில், பங்கேற்க உள்ளனர். எனவே, இரு நாட்களும் தமிழகம் முழுக்க 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளது, குடிமகன்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்திற்கு முன்பாகவே பாட்டில்களை வாங்கி வைத்துக்கொள்ள குடிமகன்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, டாஸ்மாக் போராட்டத்தால் தமிழக அரசு ரேஷன்கார்டுதாரர்களுக்கு எப்படி தலா ரூ.1000 வழங்கப்போகிறதோ தெரியவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள் நெட்டிசன்கள்.

டாஸ்மாக் மூலம் திரும்ப வந்திடும் என்ற நம்பிக்கையில் தான் குடும்ப அட்டைக்கு 1000 ரூபா ன்னு சொல்லி இருக்காங்க ! என்கிறார் இந்த நெட்டிசன்.

English summary
Tasmac employees will be enter in strike on January 8 and 9th, result 6 thousand shops will be shut on those dates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X