சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடிமகன்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    TASMAC New Annoucement | டாஸ்மாக் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா?- வீடியோ

    சென்னை : டாஸ்மாக் கடைகள் மீது புகார் இருந்தால் மாதம் இரண்டு நாள்கள் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கலாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. இந்த கடைகள் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது.

    இங்கு மது அருந்த வரும் குடிமகன்கள் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம்வாங்குவதாகவும், தண்ணீர் பாக்கெட்டுககு இவ்வளவு காசா என்றும், இந்த சைடீஸ் இவ்வளவு விலையா என்றும் தினமும் புலம்புவார்கள். இதேபோல் சரக்கு ஆப் அடித்தாலும் ஏறவே இல்லை இது டூப்ளிகேட்டா என்றும் கேள்வி எழுப்புவார்கள். இப்படி புகார்கள் அதிகரித்து கொண்டே சென்ற நிலையில் இதற்கு தீர்வுகான டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    நிர்வாகம் சுற்றறிக்கை

    நிர்வாகம் சுற்றறிக்கை

    இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    மதுபானங்கள் கூடுதல் விலை

    மதுபானங்கள் கூடுதல் விலை

    அதில் "டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பொதுமக்கள், பணியாளர்கள், பார் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வருகிறது. மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் புகார் அளித்தும் பலனில்லை என்றும் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டு உள்ளார்கள். இதில் கடைகள் மற்றும் பணியாளர்கள் இடம்மாறுதல், பணியமர்த்தல், காப்புத்தொகை திரும்பப்பெறல், பணப்பயன்கள், மதுபானங்கள் கூடுதல் விலை, மதுக்கடைகள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே செயல்படுவது உள்ளிட்ட கோரிக்கைகளே அதிகம்.

    நீதிமன்றத்தை நாடுகிறார்கள்

    நீதிமன்றத்தை நாடுகிறார்கள்

    இதனால் தலைமை அலுவலகத்தில் மனு குவிந்து வருவதால் பணிகளில் இடையூறு ஏற்படுகிறது. மனுதாரர்கள் நீதிமன்றம் நாடியும் செல்கிறார்கள். இதனால் அதிக வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

     குறைதீர் கூட்டம்

    குறைதீர் கூட்டம்

    இதனை தவிர்க்க இனி ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-ம் செவ்வாய்க்கிழமைகளில் (விடுமுறையாக இருந்தால் அதற்கு அடுத்த நாட்களில்) காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள ‘டாஸ்மாக்' மாவட்ட மேலாளர் அலுவலங்களில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள், பணியாளர்கள், பார் தின்பண்ட உரிமைதாரர்கள் பங்கேற்று குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். இந்த குறைதீர் கூட்டம் குறித்து அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டவேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.

    மனுக்கள் மீது நடவடிக்கை

    மனுக்கள் மீது நடவடிக்கை

    பெறப்படும் கோரிக்கை மனுக்களின் விவரங்கள் தனி பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். மனு கிடைத்த 15 நாட்களுக்குள் மனுவின் மீதான நடவடிக்கை குறித்து மனுதாரருக்கு தெரிவிக்கவேண்டும். நடவடிக்கை தாமதமாகும் பட்சத்திலும் மனுதாரருக்கு அதுகுறித்த தகவல் அளிக்க வேண்டும்.

    குடிமகன்கள் மகிழ்ச்சி

    குடிமகன்கள் மகிழ்ச்சி

    மாவட்ட மேலாளர் அளவில் பணியாளர்களின் குறைகள் கேட்டறியப்படுகிறதா? வாராந்திர ஆய்வு கூட்டங்கள் முறையாக நடத்தப்படுகிறதா? பெறப்பட்ட மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? அதுகுறித்து மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறதா? என்பது குறித்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாதாந்திர மாவட்ட மேலாளர்கள் ஆய்வு கூட்டத்தில் ஆராய வேண்டும். மேற்கண்ட அறிவுரைகளை மாவட்ட மேலாளர்கள் நடைமுறைப்படுத்திட வேண்டும்". இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த அறிவிப்புக்கு டாஸ்மாக்கில் மதுஅருந்தும் குடிமகன்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    English summary
    tasmac important announcement for drinkers complaint issue, monthly two days collect complaint form drinkers and bar owners
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X