சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மதுபானங்கள் விலை நாளை முதல் கிடுகிடு உயர்வு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மதுபானங்களின் விலை நாளை முதல் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு நல்ல வருவாய் ஈட்டித் தருகின்றன அரசு மதுபான கடைகள். இந்த மதுபான கடைகளை மூட வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

Tasmac liquor prices to increase from tomorrow

நீதிமன்றங்களும் பல்வேறு வழிகாட்டுதல்களையும் கொடுத்திருக்கின்றன. ஆனாலும் தொடர்ந்து மதுபானக் கடைகளை முழுவீச்ச்சில் இயக்குவதில் தமிழக அரசு முனைப்புடன் இருந்து வருகிறது.

தற்போது அரசு மதுபான கடைகளான டாஸ்மாக்கில் மதுபானங்களின் விற்பனையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி பீரின் விலை ரூ10 அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐடி ரெய்டு... இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் விஜய் அஞ்சக்கூடாது : கே.எஸ் . அழகிரிஐடி ரெய்டு... இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் விஜய் அஞ்சக்கூடாது : கே.எஸ் . அழகிரி

ஒரு குவார்ட்டரின் விலை ரூ10; ஒரு ஆஃப் விலை ரூ20; ஒரு ஃ புல் விலை ரூ40 என உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2017-ல் மதுபானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டன.

ஆனால் பீர் விலை 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் உயர்த்தப்படுகிறது.

English summary
Tasmac liquor prices will be increase from tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X