சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விற்பனை நேரத்தை அதிகரித்தும் நோ யூஸ்.. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை சரசரவென சரிவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை கிடுகிடுவென குறைந்து விட்டது. நேற்று (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் மொத்தம் ரூ.98.5 கோடிக்கு கீழ் மதுவிற்பனை நடந்துள்ளது.

Recommended Video

    Fake TASMAC Webstie| டாஸ்மாக் பெயரில் போலி வெப்சைட்... குடிமகன்களை ஏமாற்றிய கும்பல்

    41 நாட்களுக்கு மே 7ம் தேதி மதுக்கடைகள் தமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் அதிக அளவில் குடிமகன்கள் கூடினர். மே 7 மற்றும் மே 8 ஆகிய இரு நாட்களில் மட்டுமே மதுக்கடைகள் இயங்கியது. இரு நாளில் மட்டும் 290 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    Tasmac liquor sales decline in Tamil Nadu

    இதற்கிடைய உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட மதுக்கடைகள் உச்ச நீதிமன்ற உத்தரவால் மே 16 தேதி திறக்கப்பட்டது. முதல் நாள் ரூ.163.5 கோடிக்கு மதுவிற்பனையாகியது. அடுத்த நாளான ஞாயிறு அன்று ரூ.133 கோடி மதுவிற்பனையானது.

    இதனால் உற்சாகம் அடைந்த டாஸ்மாக் நிறுவனம் டாஸ்மாக் கடைகளின் திறப்பு நேரத்தை இரவு 7மணி வரை அதிகரித்தது. அதாவது கூடுதலாக 2 மணி நேரம் திறந்திருக்கும் என நீட்டித்துள்ளது.

    போய்வாங்க.. உணவு கொடுத்து 1425 தொழிலாளர்களை குடும்பத்தோடு பீகாருக்கு அனுப்பி வைத்த திருச்சி கலெக்டர்போய்வாங்க.. உணவு கொடுத்து 1425 தொழிலாளர்களை குடும்பத்தோடு பீகாருக்கு அனுப்பி வைத்த திருச்சி கலெக்டர்

    ஆனால் இந்த அறிவிப்பின் படி மதுக்கடைகள் நேரம் நீட்டிக்கப்பட்ட போதிலும்
    3வது நாள் ரூ.100 கோடிக்கு மட்டுமே மது விற்பனையானதாக கூறப்படுகிறது. அதன்பிறகு நான்காவது நாளில் 94 கோடிக்கும், நேற்று ரூ.98.5 கோடிக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனையானதாக கூறப்படுகிறது.

    மதுவை தயாரிக்கும் ஆலைகள் குறைந்த அளவே மதுபானங்கள் உற்பத்தி செய்யும் நிலையில் உள்ளூர் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது.. எனினும் ஒட்டுமொத்தமாக மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதால் டாஸ்மாக்கில் மதுபானங்கள விற்பனை 100 கோடிக்கும் கீழாக சரிந்துள்ளது. பல டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    English summary
    Tasmac liquor sales decline in Tamil Nadu, wednesday only rs 98.5 crore liquor saleses in tamac shops
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X