சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'குடிமகன்'களுக்கு ஹேப்பி நியூஸ்.. டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் நல்ல மாற்றம்.. சிறப்பான அறிவிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே தமிழக அரசையும், டாஸ்மாக்கையும் இரண்டாக பிரித்து விட முடியாது. ஏனெனில் தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான்.

அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் 'குடிமகன்'களை கையில் பிடிக்க முடியாது. இந்த நாட்களில் மட்டும் பலநூறு கோடிகள் வருமானம் பார்த்து, அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளி கொடுக்கிறது டாஸ்மாக்.

கார் கதவுகளை 20 நிமிடம் பூட்டிவிட்டு.. டாக்சி டிரைவரால் பெண் பயணி பலாத்காரம்.. பெங்களூரில் ஷாக் கார் கதவுகளை 20 நிமிடம் பூட்டிவிட்டு.. டாக்சி டிரைவரால் பெண் பயணி பலாத்காரம்.. பெங்களூரில் ஷாக்

குடிமகன்கள் புகார்

குடிமகன்கள் புகார்

''இப்படி அரசுக்கு வருமானத்தை கொட்டி கொடுப்பதில் முதலிடம் பிடிக்கும் எங்களுக்கு டாஸ்மாக்கில் சரிவர வசதிகள் செய்து தருவதில்லை'' என்று குடிமகன்கள் குற்றம் சாட்டுகின்றனர். டாஸ்மாக் பார்கள் கொரோனா காரணமாக இப்போது செயல்படுவதில்லை என்ற போதிலும், பார்கள் இயங்கும் நேரத்தில் அங்கு விற்கப்படும் பொருட்களுக்கும், நொறுக்கு தீனிகளுக்கும் மிக அதிக விலை விற்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

கூடுதல் பணம் வசூலிப்பு

கூடுதல் பணம் வசூலிப்பு

இது தவிர மதுபானங்களுக்கு அரசு ஒருவிலை நிர்ணயித்து இருந்தால் டாஸ்மாக்கில் அதை விட கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர் என்பது நீண்ட கால குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. குறிப்பாக ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு மட்டும் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாகவும், இதுபற்றி பலமுறை புகார்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிமகன்களுக்கு நற்செய்தியாக டாஸ்மாக் நிர்வாகம் சில அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

விலைப்பட்டியல்

விலைப்பட்டியல்

இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் இல.சுப்பிரமணியன் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள்,. சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில்படும்படி விலைப்பட்டியல் வைக்க வேண்டும்.மதுவிற்பனைக்கு பற்றுசீட்டு ரசீது பில் புத்தகம் மூலம் கண்டிப்பாக வழங்க வேண்டும்.

ஆய்வு நடத்த வேண்டும்

ஆய்வு நடத்த வேண்டும்

இந்த உத்தரவு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்று அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும். விதிகளை மீறும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக்கில் மொத்தமாக மதுவாங்குபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நபர்களுக்கு மொத்தமாக மதுவிற்பனை செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
The management of Tasmac has ordered that the price list should be placed in front of the Tamil Nadu Tasmac stores and a receipt should be given when selling liquor
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X