சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டாஸ்மாக் கடைகள் நேரம் மாற்றம்.. டாஸ்மாக் நிர்வாகம் புதிய உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் சார்பில் இயக்கப்படும் மதுக்கடைகள் திறக்கப்படும் நேரத்தை நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மாற்றியமைத்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையின் முழுமுடக்கத்தின் போது டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டது, பார்களையும் மூட அரசு உத்தரவிட்டது..

 Tasmac management orders to change the opening hours of liquor stores in Tamil Nadu

கொரோனா பாதிப்பு குறைந்து அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கும் தளர்வு அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக பகல் 12 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக 12 மணிக்கு திறக்கப்பட்டு 9 மணிக்கு மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் கொரோனா காலத்தில் டாஸ்மாக் வருமானம் குறைந்தது. இத்தகைய சூழலில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டதையடுத்து டாஸ்மாக் மதுகடைகள் திறக்கப்படும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்கப்பட்டது.

காலை நேரமே மதுக்கடைகள் திறக்கப்பட்டதன் காரணமாக காலையில் எழுந்தவுடனே டாஸ்மாக் கடை வாசலில் மதுப்பிரியர்கள் கூட்டமாக குவிந்து கிடப்பதாகவும், இதனால் வீடுகள் மற்றும் பொதுஇடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், கள்ளச்சந்தைகளில் மதுவிற்பனை நடப்பதாகவும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தமிழகஅரசு தற்போது மதுக்கடைகளை திறக்கும் நேரத்தை மீண்டும் மாற்றி அமைத்துள்ளது..

சூப்பர் சான்ஸ்.. வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க மேலும் 3 மாதம் அவகாசம்.. தமிழக அரசு அரசாணை..!சூப்பர் சான்ஸ்.. வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க மேலும் 3 மாதம் அவகாசம்.. தமிழக அரசு அரசாணை..!

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டாஸ்மாக் கடைகள் வருகின்ற 5-ஆம் தேதி முதல் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் செயல்படும் என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்

English summary
Tasmag management has changed the opening hours of liquor stores in Tamil Nadu. Accordingly, it has been announced that the liquor stores will be open from 12 noon to 10 pm
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X