சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபாஷ் கதிரவன்.. "நீங்க நினைச்சா அது முடியும்".. தமிழக அரசுக்கு ட்வீட் போட்ட கமல்.. இதுதான் "மய்யமோ"

தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து ட்வீட் போட்டுள்ளார் மநீம தலைவர் கமல்ஹாசன்

Google Oneindia Tamil News

சென்னை: "நீங்க நினைச்சால் அது முடியும்" என்ற பாணியில் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை கலந்த பாராட்டினை தெரிவித்து கொண்டுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் விவகாரத்தை பொறுத்தவரை மற்ற எதிர்க்கட்சிகளை விட அதிகமாக கொந்தளித்தது மநீம தலைவர் கமல்ஹாசன்தான்.. எதிர்க்கட்சிகள் இந்நேரம் பொங்கி எழுந்து, கொந்தளித்து செய்ய வேண்டியதை மய்யம் தனித்து செய்தது.

"இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது" என்று கமல் ஆவேசமானார்.. "அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டு தப்பிக்க முடியாது" என்று நேரடியாக எடப்பாடியாரை தாக்கி பேசினார்.

tasmac: MNM leader kamalhasan praises erode district collector

இது எல்லாவற்றிற்கும் மேலாக கோர்ட் வரை சென்று வழக்கு போட்டு டாஸ்மாக் வேண்டவே வேண்டாம் என்று வலியுறுத்தினார்.. கடந்த வாரம் கடை திறந்தபோது சிதறப்பட்ட சமூக விலகல் ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. அதையும் மீறி மதுக்கடைகள் திறந்து வியாபாரம் நடந்து வருகிறது. இப்போது ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. "ஈரோடு மாவட்டத்தைப் போல ஒட்டுமொத்த தமிழகத்தையும் மாற்ற அரசு முனைந்தால் முடியும் என்று கமல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் சில மாவட்டங்கள் தொற்றே இல்லாத அளவுக்கு மாறி வருகிறது.. அதில் முக்கியமானது ஈரோடு.. தொற்று தமிழகத்தில் வந்தது இந்த ஈரோட்டில்தான்.. ஆனால், தொற்று இல்லாத மாவட்டமாக உருவாகிவிட்டது.. இதற்காக அரும்பாடு பட்டு பணிபுரிந்த ஐபிஎஸ் அதிகாரிகளை பாராட்டி ஐபிஎஸ் சங்கம், தன் அதிகாரபூர்வ பக்கத்திலும் பதிவிட்டது... இதையடுத்து பலரும் ஈரோடு மாவட்ட அதிகாரிகளுக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.. அந்த வகையில் கமல்ஹாசனும் வாழ்த்து சொல்லி உள்ளார்.

tasmac: MNM leader kamalhasan praises erode district collector

அதில், "தொற்று அதிகம் இருந்த ஈரோடு மாவட்டத்தை தொற்றில்லாது மாற்றி இருக்கும் ஆட்சியர் கதிரவனுக்கும், S.P. சக்திகணேசனுக்கும், மருத்துவ, தூய்மைப் பணியாளர்களுக்கும், காவலர்களுக்கும் என் பாராட்டுகள். தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் செய்ததை மாநிலம் முழுவதும் செய்ய வேண்டாமா? அரசு முனைந்தால் முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.

ஈரோட்டை மட்டும் பாராட்டாமல் அப்படியே போகிற போக்கில் அரசையும் இடித்துரைத்து, ஒரு வேண்டுகோளை பதிவிட்டதுதான் கமல் ஸ்பெஷல்!! தவறு ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டி, கொதிப்படைந்து கண்டனங்களை சொல்கிறார் கமல்.. அதேபோல நல்லது நடந்தாலும் அதையும் மனசார பாராட்டி வாழ்த்தும் சொல்கிறார் கமல்.. ஒருவேளை இதுதான் "மய்யம்" என்பதோ!!

English summary
tasmac: MNM leader kamalhasan praises erode district collector
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X