சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க ஆதார் தேவையில்லை.. விதிகளை தளர்த்தியது உச்ச நீதிமன்றம்

Google Oneindia Tamil News

சென்னை: நாளை டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க ஆதார் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் விதிகளை தளர்த்தி உள்ளது. அதேநேரம் மதுக்கடைகளுக்கு வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

Recommended Video

    ஒரு பக்கம் கொரோனா.. மறுபக்கம் டாஸ்மாக்.. இது இப்போ அவசியமா?

    ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்களுக்கு மேல் அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக்கடைகள் கடந்த மே 7ம் தேதி திறக்கப்பட்டது..

    பல நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் ஏராளமான குடிமகன்கள் மதுபானங்களை வாங்குவதற்கு குவிந்தனர். இதனால் பல இடங்களில் சமூக விலகல் மீறப்பட்டது. . இரண்டு நாளில் மட்டும் சுமார் 250 கோடிக்க மேல் மதுபானங்கள் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    மீன் தூண்டிலில் ஒயின் பரிமாறும் கலாச்சாரம்.. ஊரடங்கிற்கு இடையே வெனிசுலாவில் பரவும் செம பழக்கம்!மீன் தூண்டிலில் ஒயின் பரிமாறும் கலாச்சாரம்.. ஊரடங்கிற்கு இடையே வெனிசுலாவில் பரவும் செம பழக்கம்!

    திறப்பு

    திறப்பு

    முன்னதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஆதாரை கட்டாயமாக்க வேண்டும், வாரத்தில் இரண்டு நாள் தான் ஒருவருக்கு மதுவாங்க அனுமதி உள்ளிட்ட நிபந்தனை அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தது.

    டாஸ்மாக் மூடல்

    டாஸ்மாக் மூடல்

    ஆனால் மதுக்கடைகள் திறக்கப்பட்ட அடுத்த நாளே பல்வேறு தரப்பினர் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை உடனே மூட மே 8ம் தேதி மாலை உத்தரவிட்டது. அத்துடன் ஆன்லைனில் மதுவிற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மே9ம் தேதி முதல் மூடப்பட்டது.

    தமிழக அரசு

    தமிழக அரசு

    இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் என டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று முறையிடப்பட்டுள்ளது. அத்துடன் கடை பல நாட்களுக்கு பிறேக திறக்கப்பட்டதால் முதல் நாளில் கூட்டம் அதிகமாக இருந்தது என்றும் அடுத்த நாளே கூட்டம் குறைந்துவிட்டதும், சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு கூறியிருந்தது.

    கடைகளை திறக்கலாம்

    கடைகளை திறக்கலாம்

    இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் என டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று முறையிடப்பட்டுள்ளது. அத்துடன் கடை பல நாட்களுக்கு பிறகே திறக்கப்பட்டதால் முதல் நாளில் கூட்டம் அதிகமாக இருந்தது என்றும் அடுத்த நாளே கூட்டம் குறைந்துவிட்டதும், சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு கூறியிருந்தது.

    முககவசம் அவசியம்

    முககவசம் அவசியம்

    எனவே நாளை டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க ஆதார் தேவையில்லை. அதேநேரம் மதுக்கடைகளுக்கு வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். டோக்கன் தனியாக ஒரு இடத்தில் விநியோகிக்கப்பட உள்ளது. ஒரு மதுக்கடையில் ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட உள்ளது. டோக்கனில் நேரம் குறிப்பிட பட்டிருக்கும்.

    English summary
    tasmac open: no need to adhar for buying liquar bottles in tamilnadu, Supreme court intererem stay order passed by madras high court
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X