சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னா ஒரு பக்கா பிளான்.. கட்டுகட்டாக.. கலர் கலர் டோக்கன் அடித்து கலக்கிய டாஸ்மாக்.. அசந்துபோன மக்கள்

முன்னதாகவே கலர் கலராக டோக்கன் அடித்து கலக்கி விட்டது டாஸ்மாக் நிறுவனம்

Google Oneindia Tamil News

சென்னை: பிளஸ் 2 தேர்வுக்குகூட இப்படி தமிழக அரசு பக்காவாக ரெடியானது இல்லை.. டாஸ்மாக்கை இன்று காலை திறப்பதற்காக, பண்டில் பண்டிலாக, அடுக்கடுக்காக, கலர் கலராக என எல்லா வகையிலும் எல்லா ஏற்பாடுகளும் மின்னல் வேகத்தில் நடந்ததை கண்டு தமிழக மக்கள் வாயை பிளந்து உட்கார்ந்து உள்ளனர்.

Recommended Video

    TASMAC Must Follow 12 Key Commands

    அப்பீலுக்கு போகும்போதே ஒரு நம்பிக்கை பிறந்துவிட்டது போலும்.. காரணம் இது அரசின் கொள்கை முடிவு என்பதால்.. எதிர்பார்த்தபடியே சாதகமான தீர்ப்பும் வந்துவிட்டது.. அதனால் அரசின் கொள்கை முடிவு, கோர்ட் தீர்ப்பு இவைகளுக்குள் நாம் போக வேண்டிய அவசியமே இல்லை.

    ஆனால், டாஸ்மாக்கை இன்று திறக்க தமிழக அரசு செய்த ஏற்பாடுகள் இருக்கிறதே, அதுதான் மலைக்க வைக்கிறது.. ஜரூர் வேகம் என்பார்களே.. அது டாஸ்மாக் விவகாரத்தில் அப்பட்டமாக தெரிந்தது.. கோர்ட்டில் தீர்ப்பு வருவதற்கு முன்பேயே டாஸ்மாக் நிர்வாகம் சுறுசுறுப்பாகி விட்டது.

    Tasmac open: தமிழகத்தில் மீண்டும் திறந்த டாஸ்மாக் கடைகள் கடைகள்.. குபீர் மகிழ்ச்சியில் குடிகாரர்கள் Tasmac open: தமிழகத்தில் மீண்டும் திறந்த டாஸ்மாக் கடைகள் கடைகள்.. குபீர் மகிழ்ச்சியில் குடிகாரர்கள்

    மதியானம் உத்தரவு

    மதியானம் உத்தரவு

    தீர்ப்பு நேற்று மதியானம்தான் வந்தது.. ஆனால் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் 7 நாளுக்கு 7 கலர் கலர் டோக்கன்கள் அடுக்கி வைக்கப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியாகின.. ஒன்றின் மேல் ஒன்றாக, கட்டி வைக்கப்பட்டு, சீல் வைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து மக்கள் ஒரு கணம் ஷாக் ஆகிவிட்டனர்.. இதெல்லாம் எப்போ நடந்து முடிந்ததுன்னே தெரியலையே என்று விக்கித்து உறைந்தனர்.. அடுத்த கொஞ்ச நேரத்தில் தமிழகம் முழுவதும் எல்லா மதுகடைகளுக்கு சப்ளையும் செய்யப்பட்டுவிட்டது.

    தடுப்பு கட்டைகள்

    தடுப்பு கட்டைகள்

    என்ன ஒரு அதீத நம்பிக்கை, ஏற்கனவே போட்டு வைத்த தடுப்புக் கட்டைகளும் முற்றிலும் அகற்றப்படாமல் அப்படியே வைத்திருந்தனர்.. அதனால்தான் இன்று காலை பாதுகாப்பு போலீசாருக்கு வேலை சுலபமாகவே இருந்தது.. குடிகாரர்களும் நேராக வந்து எங்கே, எப்படி நிற்க வேண்டுமோ அப்படியே வந்து நின்றுவிட்டனர்.. ஒரு வாரத்துக்கு 7 கலர்களில் டோக்கன்களை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

    மது விற்பனை

    மது விற்பனை

    ஒரு மணிநேரத்தில் 70 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுக்க வேண்டும், ஒரு நாளுக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் சொல்லி இருந்தனர். ஆனால் பல இடங்களில் காலையில் வரிசையில் நின்றவர்களின் எண்ணிக்கையே 500-ஐ தாண்டிவிட்டது.. அதனால் இன்று மாலைக்குள் எத்தனை பேர், எவ்வளவு சரக்குகளை வாங்கி செல்ல போகிறார்கள் என தெரிவில்லை.

    கையில் குடைகள்

    கையில் குடைகள்

    பல கிராமங்களில் விடிகாலையிலேயே வரிசையில் நின்றனர்.. மழை வந்தாலும் சரி, வெயில் வந்தாலும் சரி என்று தெளிவாகவும், உஷாராகவும் கையில் குடையுடன் வந்திருந்தனர்.. ஒருவேளை குடைக்குள் மதுவை நிரப்பி கொண்டு போனாலும் ஆச்சரியமில்லை.. காலையிலேயே பல இடங்களில் வெயில் மண்டையை பிளந்தது.. ரொம்ப நேரம் வெயிலில் நிற்க முடியாதவர்கள், அவர்களது இடத்தில் செருப்பை வைத்துவிட்டு ஒருஓரமாக உட்கார்ந்து காத்து கொண்டிருந்தனர்.

    மதுபாட்டில்கள்

    மதுபாட்டில்கள்

    மாஸ்க் இருந்தால்தான் பாட்டில் தரப்படும் என்று சொல்லப்பட்டதால், கஷ்டப்பட்டு வெயிலின் வியர்வையில் பலர் மாஸ்க் கட்டிக் கொண்டு நின்றிருந்தனர்..பலபேர் ஹெல்மெட் அணிந்து கொண்டு சரக்கு வாங்க வந்திருந்தனர்.. இதற்கு காரணம், போன வாரம் டாஸ்மாக் திறந்தபோது பெரும்பாலான குடிகாரர்களின் முகங்கள் மீடியாக்களில் வெளியாகிவிட்டது.. இவர்களது சமூக விலகல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு, அதற்கான ஆதாரங்கள் கோர்ட் வரை சென்றது.. அதனால் முகம் தெரியக்கூடாது என்று ஹெல்மெட் அணிந்து கொண்டு பலர் குவிந்திருந்ததை பார்க்கவே வித்தியாசமாக இருந்தது.

    முகத்தில் மாஸ்க்

    முகத்தில் மாஸ்க்

    அதேசயம் கடந்த முறை போல் இல்லாமல், கூட்டம் கூடி விடாமல் போலீஸார் கவனமாக உள்ளனர்... உட்கார வைத்து, நல்லா கேப் விட்டு அனைவரையும் வரிசையில் நிற்க வைத்து வருகின்றனர். முண்டியடிக்கும் கூட்டம் எங்குமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.. எங்கே கூட்டம் கூடி நாமளே காரியத்தை கெடுத்து திரும்பவும் டாஸ்மாக்கை மூட வைத்துவிடுவோமோ என்று குடிகாரர்களுக்கே ஒரு பயம் வந்துவிட்டது.. அதனால் போலீசார் எச்சரிக்கும் முன்பே அழகாக லைனில் போய் நின்று கொள்கின்றனர்!!

    போலீசார் தீவிரம்

    போலீசார் தீவிரம்

    இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்று கடையை திறப்பதற்காக, கோர்ட் தீர்ப்பு வருவதற்கு டாஸ்மாக் முன்பே எடுத்திருந்த அனைத்து முன்னேற்பாடுகளும், துரித நடவடிக்கைகளும்தான் இன்னமும் குடிமகன்களை புல்லரிக்க வைத்தும், மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தும் வருகிறது.. இந்த வேகம் ஏன் மற்ற விஷயத்தில் இல்லை என்ற கேள்விகளும் முணுமுணுக்க தொடங்கி உள்ளன!!

    https://www.oneindia.com/photos/tasmas-opened-again-people-standing-outiside-in-line-58205.html

    English summary
    Tasmac Reopen: tasmac shops reopen today in tamilnadu government action
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X