சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடிகாரர்களுக்கு நேரம் குறிச்சாச்சு.. .. 7 நாளுக்கு 7 கலர்களில் டோக்கன்.. டாஸ்மாக் நிறுவனம் அதிரடி!

மதுபானம் வாங்க 7 நாட்களில் 7 வண்ண டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: 7 நாளுக்கு 7 கலராம்.. சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என மொத்தம் 7 கலர்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    TASMAC வழக்கு... தமிழக அரசுக்கு சாதகமான உத்தரவு

    பலவித எதிர்ப்புகள், கண்டனங்களை மீறி நீதிமன்றம் சென்று மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி பெற்று வந்துள்ளது.. இதனால் நாளை கடைகள் திறக்கப்படுகின்றன. ஏற்கனவே கடந்த வாரம் டாஸ்மாக் திறக்கப்பட்டபோது சில விதிமுறைகளும் வரையறுக்கப்பட்டிருந்தன.

     tasmac shops: 7 color token for 7 days to buy wine, arranges taskmac admin

    வயது, ஆதார் கார்டு இவைகளை செக் செய்து பார்த்தபிறகுதான் சரக்கு தரப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதேபோல, டோக்கன் சிஸ்டமும் கொண்டுவரப்பட்டது.. சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த டோக்கன் முறையை அமல்படுத்தினர்.. அதனால்தான் அரசு பள்ளி வளாகம் உட்பட இந்த டோக்கன்கள் வழங்கப்பட்டன.

    தற்போது நாளை மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன.. சென்னை தவிர தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.. ஆனால் எவ்வளவு அறிவுறுத்தினாலும் குடிமகன்கள் நிதானத்தில் இருப்பதில்லை.. கடைகளை திறப்பதற்கு முன்பேயே காத்திருந்து சரக்கு வாங்கும் அக்கறை, சமூக விலகலை கடைப்பிடிப்பதில் காட்டுவதில்லை.. இதன் காரணமாகவே, கடைகளில் மதுபானம் வாங்க 7 கலர்களில் டோக்கன் விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.

    வழக்கை மாற்றிய வாதம்.. விடாமல் நடந்த சட்ட போராட்டம்.. டாஸ்மாக் வழக்கில் அதிரடி காட்டிய தமிழக அரசு! வழக்கை மாற்றிய வாதம்.. விடாமல் நடந்த சட்ட போராட்டம்.. டாஸ்மாக் வழக்கில் அதிரடி காட்டிய தமிழக அரசு!

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலர் டோக்கனுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படும். சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 கலர்களில் அந்த டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டும்தான் மதுபானம் வாங்க டாஸ்மாக் வர முடியும்.. இந்த டோக்கனை பெறவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    அலாரம் வைத்து தூங்கி எழுந்து கண்ணை கசக்கிவிட்டு வந்து நின்றாலும் பலன் இல்லை.. இந்த கலர் கலர் டோக்கன் வினியோகத்தினால் தேவையில்லாமல் கூடும் கூட்டம் தவிர்க்கப்படும்... சமூக விலகல் ஓரளவு கடைப்பிடிக்கப்படும் என நம்பப்படுகிறது. இவர்கள் தடபுடலாக தயாராகி வருகிறார்கள்.. பாவம் பெண்கள்தான்.. என்ன பாடுபட போகிறார்களோ!!

    English summary
    tasmac shops: 7 color token for 7 days to buy wine, arranges taskmac admin
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X