சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்கு பார்த்தாலும் சியர்ஸ்.. யாரைப் பார்த்தாலும் சியர்ஸ்.. தலைகீழாக மாறிய குடிகாரர்கள்.. !

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் மதுக் கடைகளை இன்று திறந்து விட்டுள்ளனர். இதனால் குடிகாரர்கள் குபீர் உற்சாக மோடுக்கு மாறியுள்ளனர்.

Recommended Video

    திறக்கப்பட்டது TASMAC! குடிமகன்கள் மகிழ்ச்சி | OneIndia Tamil

    கடைகள் தோறும் கூட்டம் கட்டி ஏறுகிறது. பலரும் உற்சாகமாக வந்து பாட்டில்களை வாங்கிக் கொண்டு வீடுகளுக்கும், பிற மறைவிடங்களுக்கும் படையெடுத்துப் போய் குடித்து உற்சாகமடைந்து வருகின்றனர்.

    ஆண்களுக்கு நிகராக பல இடங்களில் பெண்களும் கூட கடைகளில் காத்திருந்து சரக்கு வாங்கியதைக் காண முடிந்தது.

    தனித்திரு... குடித்திரு... போதையில் மயங்கி இரு - கலகல டாஸ்மாக் மீம்ஸ் தனித்திரு... குடித்திரு... போதையில் மயங்கி இரு - கலகல டாஸ்மாக் மீம்ஸ்

     தீவிரமான 2வது அலை

    தீவிரமான 2வது அலை

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையும், ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

     கடைகள் திறப்பு

    கடைகள் திறப்பு

    கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது‌. தற்போது சென்னையில் கொரோனா தொற்று குறைந்து இருப்பதால் சென்னையில் பாதிப்பு குறைந்து டாஸ்மாக்குகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

     அமோக விற்பனை

    அமோக விற்பனை

    டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு,சமூக இடைவெளியுடன் வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றி திறக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது, இந்நிலையில் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை படு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது

     குடிகாரர்கள் ஹேப்பி

    குடிகாரர்கள் ஹேப்பி

    ஒரு மாதத்திற்கு பின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் குடிமகன்கள் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் திறக்கபட்டுள்ளதால் மதுகுடிப்போர் சரக்குகளை மகிழ்ச்சியுடன் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். பெரும் வரிசையில் காத்திருந்து சரக்கு வாங்கிச் செல்கின்றனர்.

     ஏழைகளே அதிகம்

    ஏழைகளே அதிகம்

    சரக்கு வாங்க வரிசையில் நிற்போரில் பெரும்பாலானவர்கள் ஏழைகளே.. வீட்டில் சண்டை போட்டு காசு வாங்கிக் கொண்டு வந்ததாக அவர்களில் பலரும் நமது செய்தியாளரிடம் தெரிவித்தனர். என்ன மறுபடியும் வீட்டுக்குப் போனா அடிப்பாங்க.. அடிச்சுட்டுப் போகட்டும்.. சந்தோஷமா வாங்கிக்கிறோம் என்று அவர்கள் சொன்னபோது சிரிப்பதா அழுவதான்னே தெரியலை நமக்கு!

    அடுத்தடுத்து சிக்ஸர் அடித்து வந்த திமுக.. இதில் சற்றே சறுக்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

    English summary
    Tasmac shops have been re opened in all districts except 11 in Tamil nadu and people are thronging the shops to buy the liquor.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X