சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கைமீறிய பொன்னமராவதி கலவரம்.. புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    Ponnamaravathi News: பொன்னமராவதியில் கலவரம்.. 1,000 பேர் மீது வழக்குப்பதிவு- வீடியோ

    சென்னை: தஞ்சாவூர் லோக்சபா தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

    இதனால் பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டியில் உள்ள ஒரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து, தங்கள் சமூகத்தை இழிவாக பேசிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    உடனடியாக அந்த 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள், கூறினார்கள். அதற்கு போலீசார் உடனடியாக எப்படி கைது செய்ய முடியும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னமராவதியில் கலவரம்... 1,000 பேர் மீது வழக்குப்பதிவு... பதற்றம் நீடிப்பு, போலீஸ் குவிப்பு பொன்னமராவதியில் கலவரம்... 1,000 பேர் மீது வழக்குப்பதிவு... பதற்றம் நீடிப்பு, போலீஸ் குவிப்பு

    கல்வீச்சு

    கல்வீச்சு

    நேற்றும் போராட்டம் நடைபெற்றபோது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த கல்வீச்சில் 3 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

    பனை மரங்கள்

    பனை மரங்கள்

    அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள், பொன்னமராவதி சாலையில் உள்ள கடைகளின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் மற்றும் சில கடைகளை அடித்து நொறுக்கினார்கள். அவர்கள் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொன்னமராவதிக்கு வரும் சாலைகள் அனைத்திலும் பனைமரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிப்போட்டு மறியலில் ஈடுபட்டனர்.

    கலெக்டர் அதிரடி

    கலெக்டர் அதிரடி

    இப்படி கலவரம் அதிகரித்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிபோதை காரணமாக கலவரம் வேகமாக பரவுவதை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று, டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.

    1000 பேர் மீது வழக்குப்பதிவு

    1000 பேர் மீது வழக்குப்பதிவு

    இன்று முழுவதும் கடைகளை அடைத்து வைக்குமாறும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கலவரத்தில் ஈடுபட்ட 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொன்னமராவதியில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.

    English summary
    Tasmac shops will be shut in Pudukkottai district on today as ponnamaravathi violence is yet to control.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X