சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு?

Google Oneindia Tamil News

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள 3 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் சுமார் 27 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நீண்ட நாட்களாக ஊதிய ஊயர்வு அளிக்கப்பாடமல் இருந்தது. இப்போது ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள 3 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் சுமார் 27 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக 10 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஊதியம் உயர்த்தப்பட்டது.

tasmac staffs may get salary hike from September: tn govt new decision

அதன்படி, மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் 2,000 ரூபாய் உயர்த்தப்பட்டு 9,500 ரூபாய் ஆகவிம் விற்பனையாளர்களுக்கான சம்பளம் 1,900 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 7,500 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டது. விற்பனை உதவியாளர்களுக்கு சம்பளம் 2,300 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 6,500 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. ஊதிய உயர்வு ஊழியர்களுக்கு தலா 1,000த்திற்கு மேல் இருக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகத்திடமும், துறை அமைச்சரிடமும் ஊழியர்கள் பலமுறை கோரிக்கையை வைத்தனர்.

பார்த்தாலே மனசு வலிக்குது.. உடைப்பெடுத் குடிநீர் குழாய்.. ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் வீண்! பார்த்தாலே மனசு வலிக்குது.. உடைப்பெடுத் குடிநீர் குழாய்.. ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் வீண்!

இந்தநிலையில், வரும் 28ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதமும் நடைபெற உள்ளது. அப்போது, டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அனைவருக்கும் தலா 2 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

டாஸ்மாக் ஊழியர்களின் பணிக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு இல்லாமல் அனைவருக்கும் தலா 2 ஆயிரம் ஊதியத்தை உயர்த்தி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணிக்கும் அனுப்பபட்டுள்ளதாம். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளதால் வரும் கூட்டத்தொடரின் போது ஊழியர்களுக்கு சம ஊதிய உயர்வு என்ற அடிப்படையில் உயர்த்துவது குறித்து அறிவிப்பு வருமாம். செப்டம்பரில் அறிவிப்பு அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாம்.

English summary
tasmac staffs may get salary hike from september, tn govt may announce on upcoming assembly session of new decision
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X