சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

TASMAC: வள்ளலார் முக்தி பெற்ற நாள்: இன்று மதுக்கடைகள் மூடல்.. தமிழக அரசு அறிவிப்பு

வள்ளலார் நினைவுநாளை முன்னிட்டு மதுக்கடைகள் இன்று மூடப்பட்டன

Google Oneindia Tamil News

சென்னை: வடலூர் ராமலிங்க அடிகளாரின் ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு, மதுகடைகளுக்கு, இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது... இதற்காக நேற்றைய தினம் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு மதுக்கடைகள் மூடுவது வழக்கம்.. அந்த வகையில், இந்த முறை பொங்கல் பண்டிகையையொட்டி மதுக்கடைகளை மூட அரசு முடிவு செய்திருந்தது.

இதற்காக கடந்த வாரம் ஒரு அறிவிப்பும் வெளியிட்டிருந்தது.. அதில் எந்தெந்த நாட்களில் மதுக்கடைகள் இயங்கும், விடுமுறைகள் எப்போது என்றெல்லாம் தெளிவாக கூறியிருந்தது.

இன்னொரு குவாட்டர் சொல்லு குமாரு.. ஓசி சரக்கு கும்பல் அட்டகாசம்.. போர்க்களமான மதுரை மதுக்கடை! இன்னொரு குவாட்டர் சொல்லு குமாரு.. ஓசி சரக்கு கும்பல் அட்டகாசம்.. போர்க்களமான மதுரை மதுக்கடை!

 தமிழக அரசு

தமிழக அரசு

அதில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு மூடி வைக்க வேண்டும் என்றும், அன்று மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

 விடுமுறைகள்

விடுமுறைகள்

அதேபோல, 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 16ம் ஞாயிறன்று ஊரடங்கு என்பதாலும்,18ம் தேதி வடலூர் வள்ளலார் ஜோதி ஐக்கிய தின நாள் என்பதாலும் இந்த தேதிகளிலும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் அரசு அறிவித்திருந்தது.

உரிமங்கள்

உரிமங்கள்

அதுமட்டுமல்ல, மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அன்றைய தினத்தில் டாஸ்மாக் மதுபான கூடங்கள் திறக்கப்பட்டிருந்தாலோ, பார்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலோ, மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

அறிவிப்பு

அறிவிப்பு

இந்த அறிவிப்பின்படியே, விடுமுறை தினத்தன்று மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமையும், முழு ஊரடங்கை முன்னிட்டு ஞாயிற்று கிழமையும் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.. இதனால், பொங்கலன்று ஒரே நாளில் மட்டும், 317 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி புதிய சாதனையை படைத்திருந்தன.. 2 நாட்கள் விடுமுறைக்கு பின் நேற்று முன்தினம் மது கடைகள் மறுபடியும் திறக்கப்பட்டன. ஆனால், வடலுார் ராமலிங்க அடிகளார் ஜோதி ஐக்கிய தினத்தை முன்னிட்டு, இன்று மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது..

அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்

இதனால், நேற்றைய தினம் மது வகைகளை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது... ஒருநாள் மதுபானங்களை குடிமகன்கள் ஸ்டாக் வாங்கி வைத்து கொண்டனர்.. இதற்காக கார், பைக்குகளில் வந்து மதுபானங்களை வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.. இதனிடையே, இன்று விடுமுறை தினத்தில் மது கடைகள் மற்றும் பார்கள் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்வதுடன், கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க தீவிர ஆய்வு மேற்கொள்ளுமாறு, மாவட்ட மேலாளர்களை டாஸ்மாக் அறிவுறுத்தியுள்ளது..

English summary
TASMAC: Vallalar memorial day and tasmac closed today, TN Government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X