சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. தமிழகம் முழுக்க நாளை மீண்டும் திறக்கப்படும் டாஸ்மாக்.. அதிரடி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை அடுத்து நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது.

Recommended Video

    TASMAC வழக்கு... தமிழக அரசுக்கு சாதகமான உத்தரவு

    கொரோனா பரவலுக்கு இடையே நாடு முழுக்க பச்சை மற்றும் ஆரஞ்ச் சோன்களில் மதுபான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நாடு முழுக்க மதுபான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

    ஜெயலலிதாவின் வேதாநிலையம் வீட்டு கிரகப்பிரவேசம் நடந்தது இன்றைக்குதானாம் - இன்விடேசன்ஜெயலலிதாவின் வேதாநிலையம் வீட்டு கிரகப்பிரவேசம் நடந்தது இன்றைக்குதானாம் - இன்விடேசன்

    டாஸ்மாக் திறக்கப்பட்டது

    டாஸ்மாக் திறக்கப்பட்டது

    தமிழகம் முழுக்க டாஸ்மாக்கில் குடிமகன்கள் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நின்று மது வாங்கினார்கள்.டாஸ்மாக் காரணமாக கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.முகத்தில் மாஸ்க் கூட அணியாமல் வரிசையில் நின்றார்கள். முண்டி அடித்துக்கொண்டு கூட்டத்தில் மது வாங்கினார்கள். குடிமகன்களின் இந்த செயல் நாடு முழுக்க விமர்சனத்தை சந்தித்தது .

    வசூல் அதிகம்

    வசூல் அதிகம்

    டாஸ்மாக்கில் தமிழகத்தில் முதல்நாள் வசூல் 170 கோடியை தாண்டியது. மறுநாள் வசூல் 180 கோடி ரூபாயை தாண்டியது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்டதால் அதிக அளவு வசூல் செய்யப்பட்டது. சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. அதேபோல் கண்டெயின்மெண்ட் பகுதிகளில் டாஸ்மாக் திறக்கப்படவில்லை.இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை வரும் 17ம் தேதி வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    தடை போட்டது

    தடை போட்டது

    மக்கள் நீதி மய்யம் மற்றும் வழக்கறிஞர் ராஜேஷ் ஆகியோர் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீது இன்று நடந்த விசாரணையின் முடிவில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது தமிழக அரசுக்கு வெற்றியாக பார்க்கப்படுகிறது.

    நாளை மீண்டும்

    நாளை மீண்டும்

    இதனால் தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை அடுத்து நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. இதற்காக வண்ண வண்ண டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. மாநிலம் முழுக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    English summary
    Tasmac will be opened tomorrow again after SC rule today,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X