சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலக்கொடுமை- தளர்வு இல்லா லாக்டவுன் குதூகலமா? நேற்று ஒரே நாளில் ரூ189 கோடிக்கு மது விற்பனை

Google Oneindia Tamil News

சென்னை: தளர்வு இல்லாத லாக்டவுன் இன்று அமல்படுத்தப்பட்ட நிலையில் மதுபான கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ189 கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தொடங்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இந்த மாதமும் ஞாயிறுதோறும் தளர்வுகள் இல்லாத முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு பக்கம் ஜோதிகா.. இன்னொரு பக்கம் சூர்யா, கார்த்தி.. ஒரே நாளில் அடுத்தடுத்து குரல்.. என்ன நடந்தது?!ஒரு பக்கம் ஜோதிகா.. இன்னொரு பக்கம் சூர்யா, கார்த்தி.. ஒரே நாளில் அடுத்தடுத்து குரல்.. என்ன நடந்தது?!

சனிக்கிழமை கூட்டம்

சனிக்கிழமை கூட்டம்

இதனால் சனிக்கிழமைகளிலேயே இறைச்சிகடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சமூக இடைவெளியைப் பற்றிய கவலை இல்லாமல் ஞாயிற்றுக்கிழமைக்கான பொருட்களை பொதுமக்கள் வாங்கிவிடுகின்றனர். பல மணிநேரம் காத்திருந்தும் நீண்டவரிசைகளில் நின்றும் பொருட்களை இரவோடு இரவாக வாங்கி வைக்கின்றனர்.

டாஸ்மாக் கடைகளில் கூட்டம்

டாஸ்மாக் கடைகளில் கூட்டம்

இதேநிலைமைதான் டாஸ்மாக் மதுபான கடைகளிலும் நிலவுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவிழா கூட்டம் போல டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பொதுவாக சனிக்கிழமை வார இறுதி நாள் என்பதால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் இருக்கும். இப்போது ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா லாக்டவுன் என்பதால் பெருங்கூட்டமாகத்தான் குவிகின்றனர்.

மதுரையில்தான் டாப்

மதுரையில்தான் டாப்

இந்த வாரம் சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் மதுபான கடைகளில் ரூ189 கோடிக்கு மதுவிற்பனையாகி இருக்கிறது. கொரோனா லாக்டவுன் காலத்தில் வருவாய் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்; இயல்புவாழ்க்கை முடங்கிப் போயிருக்கிறது என்கிற புகார்களை தவிடுபொடியாக்கிவிடுகிறது டாஸ்மாக் கூட்டம் . இதில் மதுரை மண்டலம்தான் டாப்பில் இருக்கிறது.

மதுரையில் ரூ.44.55 கோடி விற்பனை

மதுரையில் ரூ.44.55 கோடி விற்பனை

இத்தனைக்கும் கொரோனா பாதிப்பு மதுரை உள்ளிட்ட பகுதிகளில்தான் மிக அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் மதுரை மண்டலத்தில் மட்டும் ரூ.44.55 கோடிக்கு மதுவிற்பனை களைகட்டியதாம். கொரோனா தோசை, முக கவசம் புரோட்டா என்றெல்லாம் பிரசாரம் செய்த மதுரை மண்ணில்தான் குடிகெடுக்கும் குடியை ஒழிக்கும் பிரசாரம் அதிகம் தேவை.

English summary
TASMAC wine shops recorded Rs 189 crore sale of liquor on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X