சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொளுத்தும் கோடை வெயில்.. பலத்த அனல்காற்று.. பள்ளிகள் திறப்பு தள்ளிபோகுமா? ஆசிரியர் சங்கம் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: கடும் வெயில் மற்றும் அனல்காற்றால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமாறு தமிழக ஆசிரியர் சங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆண்டு தோறும் மே மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.

ஓட்டு போட காசே தரலைன்னு யாராவது ஒருத்தர சொல்ல சொல்லுங்க.. சீமான் அதிரடி அட்டாக் ஓட்டு போட காசே தரலைன்னு யாராவது ஒருத்தர சொல்ல சொல்லுங்க.. சீமான் அதிரடி அட்டாக்

மக்கள் அச்சம்

மக்கள் அச்சம்

100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் தகித்து வருகிறது வெயில். சென்னை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அனல்காற்றும் வீசி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியே செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர்.

அமைச்சர் உறுதி

அமைச்சர் உறுதி

வாட்டும் வெயிலால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் கோரிக்கையை நிராகரித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்தப்படி ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி என்றார்.

ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ஆசிரியர் சங்கம் கோரிக்கை

இந்நிலையில் கடும் வெயிலோடு அனல் காற்றும் வீசுவதால் பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என தமிழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பாடங்களை கவனிக்க மாணவர்களின் உடல்நலம் மிக அவசியம் என்பதால் 2 வாரங்கள் அல்லது வெயிலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தள்ளி வைக்கப்படுமா?

தள்ளி வைக்கப்படுமா?

ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் பள்ளிகள் திறப்பு தள்ளிபோகுமா என்பதை பள்ளிக்கல்வித்துறைதான் உறுதி செய்யவேண்டும்.

English summary
Teachers association urges Tamilnadu govt to postponed School reopening date due to heat wave.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X