சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆளுநராகிய பிறகு முதன்முறையாக தமிழகம் வருகிறார் தமிழிசை...!

Google Oneindia Tamil News

Recommended Video

    தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்!

    சென்னை: தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வரும் 28-ம் தேதி தமிழகம் வருகிறார்.

    தூத்துக்குடியில் நடைபெறும் மகாகவி பாரதியார் 98-வது நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேச உள்ளார். கடந்த 8-ம் தேதி தெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்றுக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், அதற்கு பிறகு முதன்முறையாக தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது. பாரதி தமிழ்ச் சங்கம் சார்பாக விழாவில் கலந்துகொள்ளுமாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாம்.

    telangana governor tamilisai soundarrajan visit tamilnadu this week

    தமிழகத்திற்கு செல்ல இந்த விழா தமக்கு ஒரு சரியான வாய்ப்பாக இருக்கும் எனக் கருதி அவரும் ஒப்புக்கொண்டாராம். ஆளுநர் ஆவதற்கு முன்பு வரை ஆக்டிவ் அரசியல்வாதியாக இருந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக கட்சி வளர்ச்சிப்பணிகளுக்காக ஊர் ஊராக பயணம் செய்து கொண்டிருந்த அவர், ஆளுநர் ஆகிய பிறகு ராஜ்பவனுக்குள்ளே முடங்கிக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    மேற்கு இந்தியத் தீவுகளுக்கு 14 மில்லியன் டாலர் நிதி உதவி.. அள்ளி வழங்கிய மோடி!மேற்கு இந்தியத் தீவுகளுக்கு 14 மில்லியன் டாலர் நிதி உதவி.. அள்ளி வழங்கிய மோடி!

    மேலும், ஆளுநர் தமிழிசை தமிழகம் வரும் போது, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பலர் நேரம் கேட்டிருக்கிறார்களாம். அதனால் அவர் கூடுதலாக ஒரு நாள் தமிழகத்தில் தங்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கட்சி சார்பற்ற முறையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    English summary
    telangana governor tamilisai soundarrajan visit tamilnadu this week
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X