சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா? ஷாக்கிங்!

தெலுங்கானாவின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.எல்.ஏ. ரமேஷ் சென்னாமனேனிவின் இந்திய குடியுரிமையை மத்திய உள்துறை அமைச்சகம் பறித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Citizenship Cancelled | இந்திய குடியுரிமையே பறிபோனது.. ஷாக்கிங் !

    சென்னை: தெலுங்கானாவின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.எல்.ஏ. ரமேஷ் சென்னாமனேனிவின் இந்திய குடியுரிமையை மத்திய உள்துறை அமைச்சகம் பறித்துள்ளது.

    இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் முறையின்றி குடியேறி இருக்கும் மக்களை வெளியேற்ற மத்திய பாஜக அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

    இதன் அடிப்படையில் அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையின் போது பல லட்சம் மக்கள் குடியுரிமையை இழந்தனர். தற்போது இதை நாடு முழுக்க கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்

    யார் எல்லாம்

    யார் எல்லாம்

    இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை காரணமாக இஸ்லாமிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அசாமில் குடியுரிமையை இழந்தவர்களில் அதிகம் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தெலுங்கானாவின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.எல்.ஏ. ரமேஷ் சென்னாமனேனி தனது குடியுரிமையை இழந்துள்ளார்.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    ஆம் இந்தியாவில் இரட்டை குடியுரிமை கிடையாது. வெளிநாட்டில் குடியுரிமை இருந்தால் இந்தியாவில் குடியுரிமை பெற முடியாது. இந்த நிலையில் ரமேஷ் சென்னாமனேனி ஐரோப்பிய நாடான ஜெர்மன் குடியுரிமை பெற்றவர் என்று புகார் எழுந்துள்ளது.

    போலி ஆவணம்

    போலி ஆவணம்

    அதோடு போலி ஆவணங்கள் மூலம், இந்திய குடியுரிமை பெற்றுள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மிக முக்கியமாக, இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன்பாக ஓராண்டுக்கு மேல் அவர் இந்தியாவுக்குள் இல்லை. அதனால் அவருக்கு குடியுரிமை வழங்க முடியாது என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதனால் அவரின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது.

    வழக்கு

    வழக்கு

    வெமுலாவாதா தொகுதியில் இருந்து இவர் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வாகி உள்ளார். இந்த நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்வேன். நான் இந்திய குடிமகன் என்பதை கண்டிப்பாக நிரூபிப்பேன் என்று ரமேஷ் சென்னாமனேனி கூறியுள்ளார்.

    English summary
    Telangana MLA Chennamaneni Ramesh's losses his Citizenship after MHA action against wrong facts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X